ஷா ஆலம்-
விரைவில் கொண்டாடப்படவுள்ள
நோன்புப் பெருநாளை வசதி குறைந்த முஸ்லீம் அன்பர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்
எனும் அடிப்படையில் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு 100 வெள்ளிக்கான
பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
சிலாங்கூர் மாநில அரசின்
‘Jom Shopping Perayaan’ எனும் திட்டத்தின் கீழ் வசதி குறைந்த மக்களுக்கு கெமுனிங் உத்தாமாவில் உள்ள ஜெயண்ட் பேரங்காடியில்
பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
கோத்தா கெமுனிங் சட்டமன்ற
உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவ் தலைமையில்
450 முஸ்லீம் அன்பர்களுக்கு இந்த பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
நோன்புப் பெருநாளை அனைத்து
முஸ்லீம் அன்பர்களும் கொண்டாடி மகிழும் வேளையில் வசதி குறைந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு
விடக்கூடாது எனும் நோக்கத்தில் சிலாங்கூர் மாநில அரசு இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
பெருநாள் கொண்டாட்டத்திற்கு
தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள இந்த பற்றுச்சீட்டு பேருதவியாக இருக்கும் என்பதன்
அடிப்படையில் மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என அவர் சொன்னார்.
இந்நிகழ்வில் ஷா ஆலம் மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய சமூகத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment