கோலாலம்பூர்-
1எம்டிபி
தொடர்பான வழக்கில் அரசு வழக்கறிஞராக டத்தோஶ்ரீ கோபால் ஶ்ரீராம் ஆஜராவதை தடுக்கும் வகையில்
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நஜிப் செய்துள்ள
மனுவில் ஏற்புடைய காரணங்கள் இல்லை என்பதால் இம்மனுவை நிராகரிப்பதாக மேல்முறையீட்டு
நீதிமன்ற நீதிபதி டத்தோ ஸபாரியா முகமட் யூசோப் தெரிவித்தார்.
கோபால் ஶ்ரீராம்
ஆஜராவதால் நஜிப்பின் வழக்கில் எவ்வித பாதிப்பும் வராது. அவருக்கு நீதி கிடைக்காது என்பதில்
உண்மை இல்லை. அந்த பாதிப்பை நஜிப்பின் வழக்கறிஞர்கள்
உறுதிப்படுத்தவில்லை என்று அவர் சொன்னார்.
தமக்கு எதிரான
வழக்கில் ஶ்ரீராம் ஆஜராவதை தடுக்க கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி டத்தோஶ்ரீ நஜிப் மனுதாக்கல்
செய்திருந்தார். அந்த மனுவை இவ்வாண்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
No comments:
Post a Comment