Sunday 10 September 2017

பக்காத்தான் ஹராப்பானுக்கு தேவை மக்களின் வாக்குகளே- துன் மகாதீர்

மூவார்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு தேவை மக்களின் வாக்குகளே. இத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கைப்பற்றினால் மக்கள் தங்களது உயிரை தியாகம் செய்ய தேவையில்லை என அக்கூட்டணியின் அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி, பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தலைமைத்துவத்தில் 'சீரழிந்துள்ள' இந்நாட்டை வளமாக்க பக்காத்தான் ஹராப்பானுக்கு மக்கள் அதிகாரம் வழங்க வேண்டும்.

பக்காத்தான் ஹராப்பான், பிபிபிஎம் ஆகியவற்றிலுள்ள எங்களுக்கு மக்களிடமிருந்து தனிப்பட்ட ரீதியில் எதுவுமே தேவையில்லை. பிற நாடுகளை காட்டிலும் இங்குள்ள மக்கள் வஞ்சிக்கப்படுகின்ற சூழலில் வரும் பொதுத் தேர்தலில் மக்கள் பக்காத்தான் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என பிபிபிஎம் கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment