Friday 14 May 2021

மருத்துவமனை வார்ட்டுகள் சீராக இயங்குகின்றன- வதந்தியை நம்பாதீர்- ஈப்போ மருத்துவமனை

 ஈப்போ-

கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் வார்டுகள் நிரம்பியுள்ளன என்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

மருத்துவமனையின் செயல்பாடுகள் வழக்கம்போல் சீராகவும் நிலையில் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதன் இயக்குனர் டாக்டர் அப்துல் மாலேக் தெரிவித்தார்.

இதய நோயாளிகளுக்கான வார்டுகள் உட்பட அனைத்து வார்டுகளும் நிரம்பியுள்ளதால் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று முதல் ஐந்து நிலையிலான நோயாளிகளுக்கு இடமளிக்க மருத்துவமனை நிர்வாகம் சிக்கலை எதிர்கொண்டுள்ளது என்ற பொய்யான செய்தி வாட்ஸ் அப் செயலியின்  மூலம் பகிரப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


No comments:

Post a Comment