Monday 14 September 2020

தெலுக் இந்தான் மஇகாவுக்கே; தேமு உறுதி- டத்தோ முருகையா தகவல்

 ரா.தங்கமணி

தெலுக் இந்தான்-

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவே போட்டியிடும். அதற்கான ஒப்புதலை தேமு தலைமைத்துவம் வழங்கி விட்டது என்று மஇகாவின் உதவித் தலைவர் டத்தோ தோ.முருகையா தெரிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு வந்த கெராக்கான் கட்சி தேமு விட்டு விலகி விட்ட நிலையில், தெலுக் இந்தான் தொகுதியை மீட்டெடுக்க மஇகா களம் கண்டது.

அதன் அடிப்படையில் இத்தொகுதியில்  உள்ள மூவின மக்களிடமும் சேவையாற்றி தேமுவுக்கான ஆதரவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவே போட்டியிடும் என்று தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ அனுவார் மூசா உறுதியளித்துள்ளார் என்று தெலுக் இந்தான் தேமு ஒருங்கிணைப்பாளரான டத்தோ முருகையா கூறினார்.

வரும் பொதுத் தேர்தலில் இத்தொகுதியில் தேமுவின் வெற்றியை உறுதி செய்வதற்கான களப்பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment