விடுதலைப் புலிகளுடன்
தொடர்புபடுத்தப்பட்டு சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரம்பான்
ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
குணசேகரன் உட்பட
12 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் இல்லை என கருதப்படுவதால்
இவர்கள் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவதாக சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் கடந்த வாரம் அறிவித்தார்.
அதன் அடிப்படையில் இன்று குணசேகரன் விடுதலை செய்யப்பட்டார்.
அவரை நீதிமன்ற வளாகத்தில் வரவேற்க ஜசெகவினரும் ஆதரவாளர்களும் திரண்டனர்.
இதனையடுத்து இன்னும்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எஞ்சியவர்கள் இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படுவர்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவர்கள் எனும் குற்றச்சாட்டின் கீழ் இந்த 12 பேரும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்
No comments:
Post a Comment