17ஆவது தென்னிந்திய தமிழ்
பத்திரிக்கையாளர் சங்க மாநாட்டை மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ
ஆர்.எஸ்.தனேந்திரன் சங்க கொடியேற்றி அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து TSR சுபாஷ் ( தென்னிந்திய
தமிழ் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் ) , முன்னாள் அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின்
தலைவர் SN சின்ஹா , அவர்கள் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றியும் அதிகாரபூர்வமாக திறந்து
வைத்தார் டத்தோஶ்ரீ தனேந்திரன்.
தொடர்ந்து மாநாட்டிற்கு சிறப்பு வருகை தந்த
தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் C.விஜய பாஸ்கர் அவர்கள் பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினர்களுக்கு
1இலட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு பாலிசி பத்திரம் சமர்ப்பித்து , அரசாங்க மருத்துவமனையில்
இலவச மருத்துவ சிகிச்சை வழங்கவும் ஒப்புதல் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட தென்னிந்திய பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை, கேரளா,
ஆந்திரா, டெல்லி அனைத்து மாநில பத்திரிக்கை சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்து
சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment