Sunday 30 June 2019
1எம்டிபி: வெ. 1 மில்லியனை திரும்ப ஒப்படைத்தது அப்கோ
1எம்டிபி நிறுவனத்திடமிருந்து பெற்ற 1 மில்லியன் வெள்ளியை திரும்ப ஒப்படைத்துள்ளதாக 'அப்கோ' தெரிவித்துள்ளது.
1எம்டிபி நிறுவனத்திடமிருந்து நிதி பெற்ற 41 அமைப்புகளின் பெயர் பட்டியலை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) அண்மையில் வெளியிட்டது.
சட்டவிரோத நிதி என நம்பப்படும் இந்த நிதியை முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் அம் வங்கி கணக்கிலிருந்து இந்த 41 பேரும் பெற்றதாக எம்ஏசிசி கூறியது.
தாங்கள் பெற்ற நிதி 1எம்டிபிக்கு சொந்தமானது என்பது தங்களுக்கு தெரியாது என்று அப்கோ தலைவர் மடியோஸ் தங்காவ் தெரிவித்தார்.
1எம்டிபி நிறுவனம் 270 மில்லியன் வெள்ளி நிதி மோசடியில் ஈடுபட்டதாக இதற்கு முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment