Monday 12 November 2018

டோவன்பி மக்களுக்கு தீபாவளி பொட்டலங்கள் அன்பளிப்பு

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
தீபாவளி திருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் முயற்சியில் டோவன்பி தோட்ட இளைஞர்கள் முனைப்புடன் ஈடுபட்டனர்.

அண்மையில் இங்கு டோவன்பி தோட்டத்தில் உள்ள மக்களுக்கு உதவிடும் வகையில்  இளையோர் ஒன்றுபட்ட இயக்கம் (கிளப் பெலியா பெர்சத்து) ஆதரவில் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இவ்வியக்கம் முதன்  முறையாக இங்கு உதவிப் பொருட்களை வழங்குவதாகவும் இது வருங்காலத்தில் தொடரும் எனவும் அதன் தலைவர் பி.லெனீஸ்வரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பாளராக கலந்து கொண்ட லோ சி யீ, குதூகலத்துடன் அனைத்து மக்களும் சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும் எனும் நோக்கில் டோவன்பி இளைஞர்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கையை வெகுவாக பாராட்டுகிறேன்.  வரும் காலங்களில் மாநில அரசின் உதவியுடன் உதவித் திட்டங்கள் தொடரும் என அவர் மேலும் சொன்னார்.

கம்போங் ராமசாமி, தாமான் டோவன்பி மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த அன்பளிப்பு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. சுமார் 130 குடும்பத்தினருக்கு இந்த பொட்டலங்கள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் டோவன்பி இளைஞர்கள், இயக்க உறுப்பினர்கள், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சுரேஷ், கவுன்சிலர்,  உட்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment