Sunday 18 November 2018

ரந்தாவ் தொகுதியின் வேட்பாளர் நானா?- மறுத்தார் ரபிஸி

கோலாலம்பூர்-
ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில்  பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வேட்பாளராக தாம் போட்டியிடக்கூடும் என்பதை பண்டான் பிகேஆர் கிளைத் தலைவர் ரபிஸி ரம்லி மறுத்தார்.

இத்தொகுதியின் இடைத் தேர்தலில்  போட்டியிடுவதற்கு டாக்டர் எஸ்.ஶ்ரீராமே சிறந்த வேட்பாளர் எனவும் அவர் கூறினார்.

ரந்தாவ் தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்ற ஶ்ரீராமே இத்தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தகுதியானவர் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment