Friday 16 November 2018

15.3 மில்லியன் மலேசிய ரசிகர்களைக் கொண்டு ஆஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை


கோலாலம்பூர்-
அண்மையில், GfK நிறுவனம் மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஆஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது.வாரந்தோறும் 76.4 விழுக்காடு அதாவது 15.3 மில்லியன் ரசிகர்கள் ஆஸ்ட்ரோ வானொலியின் 11 வானொலி நிலையங்களைக் கேட்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எரா, ஹிட்ஸ், மை, ராகா முறையே மலாய், ஆங்கிலம், சீன, தமிழ் மொழிகளில் தொடர்ந்து முதல் நிலை வானொலி நிலையம் எனும் இடத்தைப் பிடித்துள்ளது.வாரந்தோறும் 1.2 மில்லியன் ரசிகர்களைக் கொண்டு ராகா நம்  நாட்டின் முன்னணி தமிழ் வானொலியாக விளங்குகின்றது.

ஆஸ்ட்ரோ வானொலியின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜேக் அப்துல்லா கூறுகையில், இன்றைய வானொலி உருமாற்றத்தில் 15.3 மில்லியன் ரசிகர்களுக்கு ஆஸ்ட்ரோ வானொலி தங்களுடைய சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது. அதை வேளையில்,ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க சமூக வலைத்தளங்கள் சிறந்த ஒரு தளமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், எங்களுடைய சமூக வலைத்தளங்களை வாரந்தோறும் 26.6 மில்லியன் ரசிகர்களும் அனைத்து வானொலி நிலையங்களின் டிஜிட்டல் அகப்பக்கங்களை சுமார் 11.5 மில்லியன் பேர் ஒவ்வொரு மாதமும் கண்டு களிக்கின்றார்கள்” என்றார்.

No comments:

Post a Comment