Friday 16 November 2018

எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு- தெலுக் இந்தானில் பரபரப்பு


ஈப்போ- 
செம்பனை காட்டுப் பகுதியில் காரில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தெலுக் இந்தான் கம்போங் பஞ்சாரில் நிகழ்ந்தது.

இன்று காலை 8.45 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எரியூட்ட காரில் சடலம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

காரின் முன் இருக்கையில் இடதுபுறம் காணப்பட்ட சடலத்தில் எவ்வித ஆவணங்களும் காணப்படவில்லை என்று பேரா மாநில குற்றவியல் விசாரணை பிரிவுத் தலைவர்  ஏசிபி யாஹ்யா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இக்கார் கொளுத்தப்படுவதற்கு முன்னர் வேறொரு இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு தீயிடப்பட்டிருக்கலாம் என்பதை அவர் மறுக்கவில்லை.

அங்கு ஏதேனும் தடயங்கள் கிடைக்கப்பெறவில்லை என கூறிய அவர், கைப்பற்றப்பட்ட சடலம் அடையாளம் காணப்படுவதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் தொடர்பிலான விசாரனை செக்ஷன் 302 குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment