Tuesday 6 November 2018

மக்களின் திருநாளாக தீபாவளி கொண்டாட்டம் அமையட்டும் - சிவநேசன்

ஈப்போ-
மக்கள் தேர்ந்தெடுத்த புதிய அரசாங்கத்துடன் கொண்டாடுகின்ற தீபாவளி நன்னாள் மலேசிய இந்தியர்களின் திருநாளாக அமைந்திடட்டும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி அமைக்க இந்தியர்கள் வழங்கிய பேராதரவு மறுக்க முடியாததாகும். அவ்வகையில்  மக்கள் அரசாங்கத்துடன் இந்த தீபாவளி குதூகலம் அமைந்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு காண்பதற்கு ஏதுவாக ஆக்ககரமான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியர்களின் மேம்பாடும் உறுதி செய்யப்படுவதற்கு இந்த தீபாவளி திருநாள் அமையட்டும் என்று சிவநேசன் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment