Wednesday 28 November 2018
சீபில்ட் ஆலய மோதலை அரசியலாக அணுக வேண்டாம் - டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதலை அரசியல் நோக்கத்தோடு அணுக வேண்டாம் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
அரசியலையும் தாண்டி இதை ஒரு கடுமையான குற்றச்செயலாக கருதுவதோடு நாட்டில் நிலவும் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைக்க முயலும் தரப்பினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சீபில்ட் மாரியம்மன் ஆலயத்தில் நுழைந்த் குண்டர் கும்பலினால் இந்தியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை இனவாத மோதலாகவும் அரசியல் நடவடிக்கையாகவும் கருத வேண்டாம்.
அரசியல் பகடைக்காயாக இவ்விவகாரத்தை கையாளாமல் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்ட தரப்பினர் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு இதுபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், சீபில்ட் ஆயலத்தில் ஏற்பட்ட சேதத்திற்கு நிவாரண நிதியாக 20 ஆயிரம் வெள்ளியை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment