கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது மாமன்னர் சுல்தான் முகமட் வி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதரும் மஇகாவின் முன்னாள் தலைவருமான டத்தோஶ்ரீ உத்தாமா ச.சாமிவேலு 'துன்' எனும் உயரிய விருதை பெற்றார்.
நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் இந்த 'துன்' விருதை இன்று அரண்மனையில் நடைபெற்ற விருதளிப்பு வைபவத்தின்போது மாமன்னரின் கரங்களால் அவர் இவ்விருதை பெற்றுக் கொண்டார்.
கடந்த 1974இல் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 'துன்' சாமிவேலு, பொதுப்பணி அமைச்சராக பணியாற்றி திறம்பட சேவையாற்றினார்.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் இந்தியா, தெற்காசிய நாடுகளுக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டதோடு, மஇகாவின் தேசியத் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
மஇகா தேசியத் தலைவராகவும் அமைச்சராகவும் பதவி வகித்தபோது இந்திய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியதோடு ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம் உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.
No comments:
Post a Comment