Wednesday 6 September 2017

ஜிஎஸ்டிக்கு பதிலாக விற்பனை வரி - துன் மகாதீர்


கோலாலம்பூர்-
தற்போது நடப்பிலுள்ள ஜிஎஸ்டி (பொருள், சேவை வரி) அகற்றப்பட்டால் அதற்கு மாற்றாக விற்பனை வரி அமலாக்கப்பட வேண்டும் என நம்பிக்கை கூட்டணியின் அவைத் தலைவர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டியை அகற்றுவது அரசாங்கத்திற்கு நல்லதல்ல. ஜிஎஸ்டியை திடீரென அகற்றினால் நாட்டின் வருமானத்திற்கு வழியில்லாமல் போய்விடும்.
ஜிஎஸ்டியை அகற்றுவதால் அரசாங்கத்தின் வருமானம் குறைவதோடு அதனால் அரசாங்க நிதிகள் மீது ஏற்படக்கூடிய தாக்கத்தை குறைப்பதற்கு விற்பனை வரி  விதிக்கப்படுவது அவசியமாகிறது என அவர் சொன்னார்.

வரும் பொதுத் தேர்தலில்  வெற்றி பெற்றால் நம்பிக்கை கூட்டணி அறிவித்துள்ள வாக்குறுதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் துன் மகாதீர் இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment