Sunday 3 September 2017

எதிர்க்கட்சி பிரதிநிதிகளால் இந்திய சமுதாயத்தை முன்னேற்ற முடியாது

ரா.தங்கமணி
படங்கள்: புனிதா சுகுமாறன்

ஈப்போ-
எதிர்க்கட்சியில் உள்ள இந்தியப் பிரதிநிதிகளால் நமது சமுதாயத்தை எவ்வகையிலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது. ஆதலால் எதிர்க்கட்சியினரை நம்பி நமது சமுதாயத்தை அடகு வைக்கக்கூடாது என பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி வலியுறுத்தினார்.

இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சியே மஇகா ஆகும். மஇகாவை தவிர வேறு எந்த கட்சியாலும் இந்திய சமுதாயத்தை மேம்படுத்த முடியாது.
எதிர்க்கட்சியில் உள்ள இந்தியப் பிரதிநிதிகள் இந்திய சமுதாயத்தை பிரதிநிதிப்பதாக சொல்லலாம். ஆனால் அவர்களால் சமுதாயத்தை பிரதிநிதிக்க முடியுமே தவிர மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்க முடியாது.

சமுதாயத்திற்கு என்றுமே மஇகா மட்டுமே வழிகாட்டுதலாக அமையும். ஏனெனில் இந்திய சமுதாயத்தை சார்ந்திருப்பதற்காகவே மஇகா தோற்றுவிக்கப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆளும் தேசிய முன்னணியில் ஒரு பங்காளி கட்சியாக உள்ள மஇகா, இந்திய சமுதாயத்தின்  முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  குறைகள் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியினரால் இந்திய சமுதாயத்தில் எவ்வித மாற்றங்களை கொண்டு வர முடியாது என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் உணர வேண்டும்.  
ஆகவே வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியை இளைஞர்கள் ஆதரிப்பதை பேராக் மஇகா இளைஞர் பிரிவு உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ற ஆக்ககரமான திட்டங்களை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவின் பேராளர் மாநாட்டில் தொடக்க உரையாற்றுகையில் மு.நேருஜி வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில்  பேராக் தேசிய முன்னணி செயலாளர் டத்தோ ஷலிமின் பின் அஹ்மாட் ஷாபி, பேராக்  மஇகா தலைவர் டத்தோ வ.இளங்கோ, பேராக் சட்டமன்ற சபாநாயகர் திருமதி தங்கேஸ்வரி,  மஇகா இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சி.சிவராஜ், மஇகா மகளிர் பிரிவுத் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி, பேராக் மாநில மகளிர் பிரிவுத் தலைவி திருமதி தங்கராணி, புத்ரா, புத்ரி பிரிவினர் உட்பட திரளான பேராளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment