Wednesday 6 September 2017

இன ரீதியிலான அரசியல் எதிர்க்கட்சிக்கு தேவையில்லை -பேராசிரியர் இராமசாமி

சுகுணா முனியாண்டி

ஜோர்ஜ்டவுன் -
எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி அமைத்தால் சிறுபான்மை இனமான இந்திய சமூகத்தின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வரும் ஜசெக துணைச் செயலாளருமான பேராசிரியர் பி.இராமசாமி கூறியுள்ளார்

60 ஆண்டு காலமாக தேசிய முன்ணனியின் பாகுபாடு கொள்கைகளால் நாட்டிலுள்ள இந்திய சமூகத்தினர் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக சுட்டிக் காட்டிய அவர், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்தால் இந்தியர்களின் தேவைகள்  அடையாளம் காண வேண்டும், தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக ,பிகேஆர் ஆகிய இரண்டு கட்சிகளில் தான் இந்தியத் தலைவர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் பக்காத்தான் ஹராப்பன் தலைமைத்துவப் பட்டியலில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் ஏற்புடையதாக இருக்க வேண்டும் .

எதிர்க்கட்சிக் கூட்டணி தலைமைத்துவப் பட்டியலில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் ஏற்புடையதாக இருந்தால்தான் வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வாக்களிப்பர் என்றும் அவர் கூறினார் .

இந்தியர்களுக்கு எதிர்க்கட்சிக் கூட்டணியில் இன ரீதியிலான ஓர் அரசியல் கட்சி தேவையில்லை. இந்திய சமூகத்தினர் தொடர்ந்து ஓரங்கட்டப்படாமல் இருக்க வேண்டுமானால் வரும் 14 வது பொதுத் தேர்தலில் இந்திய சமூகத்தினர் தேசிய முன்ணனியை புறக்கணிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார் .

No comments:

Post a Comment