Wednesday 6 September 2017

ஒருதலைபட்ச மத மாற்றத்தை தடுக்க 3இல் 2 பெரும்பான்மை இல்லை - டத்தோஶ்ரீ நஜிப்

கோலாலம்பூர்-
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆளும் அரசாங்கத்திடம் இல்லாததால் ஒருதலைபட்சமான மதமாற்றத்தை தடுப்பதற்கான அரசியலமைப்பு சட்ட மசோதாவை கொண்டு வர முடியவில்லை என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டார்.

இந்த தன்மூப்பான மத மாற்ற நடவடிக்கையை தடை செய்ய வேண்டுமானால் அரசியல் அமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். அந்த பெரும்பான்மை தற்போது அரசாங்கத்திடம் இல்லை என அவர் விவரித்தார்.

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுடனான டி.என் 50 கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் இவ்வாறு கூறினார்.

இதற்கு முன்பதாக பேசிய மகளிர் அமைப்புக்கான தேசிய மன்றத்தின் தலைமைச் செயலாளர் ஓமனா சிரினி ஓங், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டச் சீர்திருத்தம் (திருமண மற்றும்  மணவிலக்கு) சட்டத்தின் 88ஏ-(1) ஆவது பிரிவை மீண்டும் இணைத்து அரசாங்கம் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment