Friday 1 September 2017

இவ்வார கண்ணாடியில் சுமைக்கு மேல் சுமை


தன்னுடைய 5 குழந்தைகளுடன் சாலை விபத்தில் சீக்கிப் படுத்தப்படுக்கையில் இருக்கும் தன்னுடைய அண்ணானின் 3 குழந்தைகளும் வளர்த்து வரும் சுங்கைப் பட்டாணி ஆக்னெஸ் குடும்பக்கதையை இவ்வாரம் கண்ணாடி நிகழ்ச்சி கொண்டு வரவுள்ளது.


படுத்தப்படுக்கையிலுள்ள தன்னுடைய அண்ணானுடைய மருத்துவ செலவுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரிம 400 வரை செலவாகுகின்றது என்கிறார் ஆக்னெஸ். அதுமட்டுமின்றி, போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால் மருத்துவமனைக்குச் செல்ல ஒவ்வொரு முறையும்  ஆம்புலன்ஸ் சேவைக்கு ரிம 100 செலுத்த வேண்டியுள்ளது. அதை வேளையில், ஆக்னெஸ் தன்னுடைய 59 வயது தாயாரையும் கவனித்து வருகின்றார்.

இக்
குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை செய்ய விரும்புவார்கள் இன்று வெள்ளிக்கிழமை 1-ஆம் தேதி இரவு மணி 10 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் ஒளிபரப்பாகும் கண்ணாடி நிகழ்ச்சியை மறவாமல் பாருங்கள். அவ்வாறு உதவு முன் வரும் கரங்கள் secretariat.nawem@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.


No comments:

Post a Comment