கோலாலம்பூர்-
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கக்கூடும் என்ற பிகேஆர் கட்சியின்
தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கனவு தகர்க்கப்பட்ட நிலையில் இப்போது
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அவர் வலம் வரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியில் துன் மகாதீருக்கு அடுத்து
அன்வாரே பிரதமராக வர வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
ஆனால் கடந்த மாதம் நிலவிய அரசியல் நெருக்கடில் பக்காத்தான் ஹராப்பான்
கூட்டணி ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் டான்ஶ்ரீ முஹிடினை பிரதமராக ஏற்றுக் கொண்ட தேசிய
கூட்டணி ஆட்சி அமைத்தது.
இதனிடையே, மே 18ஆம் தேதி கூடவுள்ள மக்களவை கூட்டத் தொடரின்போது
டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படும் சாத்தியங்கள்
இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கனவு கலைந்து தற்போது எதிரணித்
தலைவராய் மக்களவையில் டத்தோஶ்ரீ அன்வாரின் குரல் எதிரொலிக்கலாம்.
No comments:
Post a Comment