Sunday 22 March 2020

ஏடிஎம் மையங்கள் 7 முதல் 10 மணி வரை மட்டுமே செயல்படும்

கோலாலம்பூர்-
கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏற்ப வங்கி ஏடிஎம் மையங்கள் காலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மட்டுமே செய்ல்படவுள்ளன.

பேங்க் நெகாரா மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டிலுள்ள
வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் ஏடிஎம் மையங்கள் அனைத்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செயல்பட முடியும்.

இது தொடர்பிலான சுற்றறிக்கை அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அன்றாட தேவைகளுக்காக பணத் தேவையை எதிர்நோக்கும் மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் ஏடிஎம் மையங்களை பயன்படுத்தி கொள்ளுமாறு அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment