Sunday 29 March 2020

கோவிட்- 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர் தற்கொலை

செர்டாங்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவர் செர்டாங் மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வைரஸ் தொற்றின் அறிகுறிகளோடு  62 வயது மதிக்கத்தக்க ஆடவர் செர்டாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அந்த பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்திருந்த அவர், கழிவறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததை அடுத்து பரிசோதித்தபோது அவர் தூக்கிலிட்டு தற்கொலைன் செய்து கொண்டது
தெரிய வந்தது. இச்சம்பவம் இரவு 7.00 மணியளவில் நிகழ்ந்தது

சம்பவம் நடந்த இடம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் இந்த மரணம் 'திடீர் மரணம்' என்று வகைபடுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment