சிலாங்கூர் மாநில அரசு ஆட்டம் கண்டுள்ளதாக வெளியான தகவலை மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி மறுத்தார்.
மாநில அரசு நிர்வாகம் நிலைத்தன்மையுடன்
உள்ளது. நான் இன்னமும் ஆட்சிக்குழு கூட்டத்திற்கும்
சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கூட்டத்திற்கும் தலைமையேற்றுள்ளேன். அந்த அறிக்கை மாநில
அரசின் உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை என்றார் அவர்.
சட்டமன்றக் கூட்டத்தில் 18 வயதுக்கு குறைவான சிறார்
மதமாற்றம் தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது சில பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மாநில நிர்வாகம் ஆட்டம் கண்டுள்ளது என்ற தகவல்கள் பரவின.
இந்த புதிய சட்ட மசோதாவின்
மூலம் சிறார் மதமாற்றத்திற்கு தற்போது நடைமுறையிலுள்ள ‘தாய் மற்றும் தந்தை’ என்ற சொல்லை
‘தாய் அல்லது தந்தை’ என மாற்றுவதற்கு வழிவகுக்கிறது.
இதன் மூலம் முன்பு சிறார் மத மாற்றத்திற்கு தாய், தந்தை இருவரின் அனுமதியும் வேண்டும்
என கூறப்படுகிறது.
இந்த புதிய சட்ட மசோதா மூலம்
தாய், தந்தை ஒருவரின் சம்மதத்துடன் சிறார் மதமாற்றம் செய்யப்படலாம் என்பதற்கு வழிவகுக்கிறது.
No comments:
Post a Comment