Thursday 8 August 2019

‘காட்’ சித்திர மொழி; கேள்வி- பதில் அளிக்கிறது கல்வி அமைச்சு

(மொழியாக்கம்: ரா.தங்கமணி)

புத்ராஜெயா-
நாட்டில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள ‘காட்’ எனப்படும் அரேபிய சித்திர மொழி அமலாக்கம் தொடர்பில் கல்வி அமைச்சு 10 கேள்விகளும் அதற்கான பதிலையும் வழங்கியுள்ளது.

அடுத்தாண்டு முதல் தமிழ், சீனப்பள்ளிகளில் பயிலும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இந்த காட் சித்திர மொழி பயிற்றுவிக்கப்படும் என கல்வி அமைச்சு அண்மையில் கூறியிருந்தது. இது இந்திய, சீன சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு இவ்விவகாரம் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள 10 கேள்விகளும் அதற்கான பதில்களும்;

1.      என்ன நடந்தது?

-   கேஎஸ்எஸ்ஆர் (KSSR)  திட்டத்தின் கீழ் 4ஆம் ஆண்டு தேசிய மொழி பாடத்தில் கூடுதல் பாடமாக ‘காட்’ சித்திர மொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2.    இதை அமல்படுத்துவதன் அடிப்படை நோக்கம் என்ன?

-        தேசிய மொழியின் வரலாற்றையும் அதன் கலை வடிவத்தையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் நோக்கில் கூடுதல் பாடமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3.   இது எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது?

-      தேசிய மொழி பாட புத்தகத்தின் வழியே இது அமல்படுத்தப்படுகிறது. தேசிய மொழி பாடப்புத்தக்கத்தில் உள்ள 164 பக்கங்களில் 6 பக்கங்களில் மட்டுமே ‘காட்’ சித்திர மொழி  இணைக்கப்பட்டுள்ளது.



4.   6 பக்கங்களில் உள்ள ஜாவி எழுத்துகளில் மாணவர்களால் தேர்ச்சி பெற முடியுமா?


- தேசிய மொழியின் வரலாறு, கலை, பாரம்பரியம் ஆகிய அம்சங்களில் மாணவர்களின் திறனை மேம்படுத்தவே ‘காட்’ சித்திர மொழி அமலாக்கம் செய்யப்படுகிறது. ஜாவி எழுத்தில் புலமை பெற வேண்டும் என்பதற்கான ஆய்வு அல்ல.


5.    தேசிய மாதிரி (SJK) பள்ளிகளில் மட்டும்தான் இது அமல்படுத்தப்படுகிறதா?


-     இல்லை. தேசிய பள்ளிகளிலும் (SK), தேசிய மாதிரி (SJK) ஆரம்பப்பள்ளிகளிலும் இது   அமல்படுத்தப்படுகிறது.


6. இந்த அமலாக்கத்தின் முடிவு எப்போது எடுக்கப்பட்டது?

- 2014இல் தொடக்கப்பள்ளி பாடத்திட்டத்தின் (KSSR) மறு ஆய்வின்போது ‘காட்’ சித்திர மொழி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

7.  இது 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும்தானா?

- இது 2020ஆம் ஆண்டில் 4ஆம் ஆண்டு, 20121இல் 5ஆம் ஆண்டு, 2022இல் 6ஆம் ஆண்டு  பயிலும் 2ஆம் நிலை மாணவர்களுக்கானது. இதில் முதல்நிலை மாணவர்களுக்கு (1ஆம் ஆண்டு முதல் 3ஆம் ஆண்டு வரை) ‘காட்’ சித்திர மொழி பயிற்றுவிக்கப்படாது.

8. ‘காட்’ சித்திர மொழி தேர்வுகளில் கேள்வியாக இணைக்கப்படுமா?

- இல்லை. காட் சித்திர மொழி தேர்வில் இடம்பெறாது.

9. முஸ்லீம் அல்லாத மாணவர்கள் காட் சித்திர மொழியை கற்க கட்டாயப்படுத்துவது ஏன்?

- இது கட்டாயம் இல்லை, மாறாக மாணவர்களிடையே தேசிய மொழியின் வலராறு, கலை, பண்பாட்டு திறனை மேலோங்கச் செய்யும் நடவடிக்கையாகும்.  அதோடு, 2015ஆம் ஆண்டு முதலே தேசிய மாதிரி பள்ளிகளில் தேசிய மொழி பாடத்தின்போது காட் சித்திர மொழி பயிற்றுவிக்கப்படுகிறது. 

இதனை 5ஆம் ஆண்டு பாட புத்தக்கத்தில் 85 முதல் 88 வரையிலான பக்கங்களில் காணலாம். (6 என்ற கருப்பொருளின் கீழ் சித்திர மொழி 17ஆவது பிரிவில் பண்பாட்டை போற்றுகிறது)

10. சித்திர மொழி ஏன் ‘குறியீடு’, அறிவியலின் பிற துறைகளின் மீது கவனம் செலுத்தப்படவில்லை?
- காட் எழுத்து என்பது மலாய் மொழிக்கு பொருத்தமான பாடத்தில் கூடுதல் அம்சமாக உள்ளது.
தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு குறியீட்டு அல்லது குறியீட்டு முறையை ஆரம்ப பள்ளி பாடத்திட்டம் (KSSR) ,மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டம் (KSSM) ஆகியவற்றை செயல்படுத்துவதை 2017இல் ஆய்வு செய்து கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியது.
ஆரம்ப பள்ளியில் இது 2ஆம் நிலை மாணவர்களை உள்ளடக்கியது (4.5 6 ஆண்டுகள்). மேல்நிலைப் பள்ளிக்கு, இது 1 முதல் 3ஆம் படிவங்களில் உள்ளது.
இந்த குறியீட்டு அம்சம் வடிவமைப்பு, கணினி  தொழில்நுட்பப் பாடங்கள், மூலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment