Wednesday 26 April 2017

SG. SIPUT SITF OFFICE LAUNCHING BY DATO SERI DR. SUBRAMANIAM

சுங்கை சிப்புட் எஸ்ஐடிஎஃப் அலுவலகத்தை திறந்து வைக்கிறார் டத்தோஸ்ரீ சுப்ரா

     



       லேசியாவிலுள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் அடையாள அட்டை, குடியுரிமை, பிறப்புப் பத்திரம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுக் காணும் வகையில் அமைக்கப்பட்ட இந்தியர் விவகார சிறப்பு பணிக்குழுவின் (எஸ்ஐடிஎஃப்) கிளை அலுவலகம் சுங்கை சிப்புட் வட்டாரத்தில் திறப்பு விழா காண்கிறது.


     நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொட்டே இன்னுமும் குடியுரிமை இல்லாமல் வாழ்வோரின் வேதனைகள் சொல்லில் அடங்காதவை. பிறப்புப் பத்திரம் இல்லாததால் தங்களது கல்வியை பாதியிலேயே கைவிட்டவர்களும் உள்ளனர்.

    இத்தகைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண தொடங்கப்பட்ட எஸ்ஐடிஎஃப் நாடு முழுவதும் சிறப்பான சேவையை மேற்கொண்டு வரும் வேளையில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் அதன் கிளை அலுவலகத்தை மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நாளை 27ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.


     அதோடு ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி, ஆலயங்களுக்கு மானியம் ஆகியவற்றையும் டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் வழங்கவுள்ளார் என சுங்கை சிப்புத் தொகுதி மஇகா தலைவர் இளங்கோ முத்து கூறினார்.

No comments:

Post a Comment