'புளூபிரிண்ட்' : திட்டங்களை கண்காணிக்க சிறப்பு இலாகா
இந்திய சமுதாயத்தின்
முன்னேற்றத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வியூக செயல் வரைவுத் திட்டத்தை கண்காணிக்க
சிறப்பு இலாகா உருவாக்கப்படும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டு காலத்திற்கான
வியூக வரைவுத் திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அறிமுகப்படுத்தியுள்ள வேளையில் இதில்
4 முக்கிய கூறுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கல்வி, பொருளாதாரம்,
சமூக நலன், சமூகவியல் போன்ற அடிப்படை பிரச்சினைகளை
இந்த புளூபிரிண்ட் உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக பி40 பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான திட்டங்கள், குடியுரிமை
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் சில திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment