ஷா ஆலம்-
இந்திய சமுதாயத்திற்கு என்ன வாக்குறுதிகள் வழங்கி ஆட்சியை பிடித்தோம் என்பதை பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்கள் மறந்துவிடக்கூடாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
கடந்த 14 பொது தேர்தலின் போது இந்திய சமுதாயத்திற்கு பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆயினும் ஆட்சி பிடித்து ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னரும் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற படாதது இந்திய சமுதாயத்தில் பெரும் அதிருப்தி அலையாக உருவெடுத்துள்ளது.
பக்காதான் ஹராப்பன் கூட்டணிக்கு இந்திய சமுதாயம் வழங்கிய ஆதரவு மிகப் பெரியது. ஆனாலும் இந்த ஒன்றரை ஆண்டு ஆட்சி காலத்தில் இந்திய சமுதாயம் பெரும் அதிருப்தி கொண்டிருப்பது இக்கூட்டணி பலவீனமானது.
இந்த ஒன்றரை ஆண்டு ஆட்சி காலத்தில் தலைதூக்கியுள்ள பல்வேறு விவகாரங்களால் இந்த அதிருப்தி அலை உருவாகியுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலின் போது இந்திய சமுதாயத்திற்கு என்னென்ன வாக்குறுதிகள் வழங்கப்பட்டன, எதைக்கொண்டு நாம் ஆட்சி அமைத்தோம் என்ற உண்மையை பக்காத்தான் கூட்டணி மறந்துவிடக்கூடாது.
இந்திய சமுதாயத்தின் ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் அவர் குறிப்பிட்டார்.
அதனை சீர்செய்யும் வகையில் இப்போதே ஆக்ககரமான நடவடிக்கையில் நாம் இறங்க வேண்டும்.
மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு நாம் ஏமாற்றத்தை கொடுத்து விடக்கூடாது என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.
Advertisement
No comments:
Post a Comment