போர்ட்டிக்சன் இடைத்தேர்தலின்போது மாநில மக்களுக்கு சிறப்பு விடுமுறையாக மாநில மந்திரி பெசார் அறிவிக்க வேண்டும் என்று அத்தொகுதியின் பிகேஆர் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுரேஸ் குமார் வலியுறுத்தினார்.
இங்குள்ள அதிகமான வாக்காளர்கள் வெளியிடங்களில் வேலை செய்வதால் இந்த விடுமுறை கோரப்படுகிறது.
வாக்களிப்பு தினம் சனிக்கிழமை நடைபெறுவதால் அன்றைய தினம் வெளியிடங்களில் வேலை செய்வதால் வாக்களிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம். குறிப்பாக சிரம்பான், செப்பாங், கேஎல்ஐஏ போன்ற இடங்களில் பணியாற்றுவோருக்கு குறைந்தபட்சம் 2 முதல் 4 மணி நேர அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
சுரேஸ் குமார் |
75,000 வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலின்போது அங்குள்ள மக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பினாங்கு மாநில முதல்வராக இருந்த லிம் குவான் எங் சிறப்பு விடுமுறையை அறிவித்தார்.
அதேபோன்று வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள போர்ட்டிகசன் இடைத்தேர்தலை முன்னிட்டு நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹருண் வழங்க வேண்டும் என்று சுரேஸ் குமார் கோரிக்கை விடுத்தார்.
போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் 7. முனைப் போட்டி நிலவுகிறது. பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து 6 பேர் களமிறங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment