Saturday 22 September 2018

விஷ மதுபானம்; மேலும் இருவர் மரணம்




ஷா ஆலம்- 
சிலாங்கூரில் ஒரு சில வகையான விஷ மதுபானத்தை அருந்தியர்களின் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், நேற்று மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர் என்று இம்மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சூர் தெரிவித்தார்.
மரணமடைந்த இருவரில் ஒருவர் மியான்மார் நாட்டைச் சேர்ந்தவரும் மேலும் ஒருவர் நேப்பாளத்தைச் சேர்ந்தவரும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இருவருக்கும் கிட்டத்தட்ட 30 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுவரையில், 2 மலேசியர்கள், 2 வங்காளதேசிகள், 6 நேப்பாளியர்கள், மியான்மார் நாட்டைச் சேர்ந்த 10 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் மருத்துவமனையில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும் 14 பேர் சிகிச்சைப் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டனர் எனவும் அவர் சொன்னார்.
சிலாங்கூரில் இந்த விஷ மதுபானத்தை அருந்தி உயிரிழந்தவர்களின் உட்பட மொத்தம் 58 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment