கோலாலம்பூர்,செப்.20-
எதிர்க்கூட்டணியாய் திகழும் அம்னோ, பாஸ் ஆகியவை இணைந்து செயல்படுவதில் எவ்வித தவறும் இல்லை என முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாஸ் கட்சி பிகேஆர், ஜசெக ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.
இனம், மதம் பாராமல் அனைத்து மலேசியர்களுக்கும் போராடும் வேளையில் மலாய், இஸ்லாம் ஆகியவற்றுக்கும் போராடுவதில் தவறில்லை என அவர் சொன்னார்.
கட்சியை மீண்டும் வலுபடுத்த அம்னோவின் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடிக்கும் கட்சி உறுப்பினர்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என அவர் சொன்னார்.
No comments:
Post a Comment