Saturday 22 September 2018

1.5 மில்லியன் தொகைச் செலுத்தினார் நஜிப்

கோலாலம்பூர்- 
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 3.5 மில்லியன் ஜாமீன் தொகையில் முதல் பகுதியான 1.5 மில்லியனைச் செலுத்தி வெளியேறினார்.
இந்த முதல் பகுதியைச் செலுத்துவதற்கு காலை 10.55 மணியளவில்  கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்த அவர், இது சம்பந்தமாக பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திட்டார். 
கோலாலம்பூர் நீதிமன்றத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர், 3.5 மில்லியன் தொகையில் 1.5 மில்லியன் தொகையை செலுத்துவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டத்தோஶ்ரீ நஜிப்.
மீதமுள்ள தொகையை நீதிபதி நிர்ணயித்தப்படி கட்டங்கட்டமாகச் செலுத்தப்படும். இந்த எஞ்சிய தொகையைச் செலுத்துவதற்கு இம்மாதம் 28ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment