Tuesday 4 September 2018

பிரதமர் பதவியில் அன்வார்; வாக்கு மீறப்படாது- துன் மகாதீர்


பண்டார் ஶ்ரீ பகவான்-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் செய்துக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு ஏற்ப பிரதமர் பதவியை டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பேன் என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

நான் ஓர் இடைக்காலப் பிரதமராகவே இருப்பேன் என்றும் அடுத்த இரண்டாண்டு காலத்திற்குள் இப்பதவியை டத்தோஶ்ரீ அன்வாரிடம் ஒப்படைப்பேன்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக துன் மகாதீருக்குப் பின்னர் டத்தோஶ்ரீ அன்வார் நாட்டின் பிரதமராக பதவியேற்பார் என உடன்படிக்கை செய்யப்பட்டது.

அது குறித்து கருத்துரைத்த துன் மகாதீர், கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன். தற்போது அன்வார் முதிர்ச்சியுடனும் அனுபவத்துடனும் இருக்கிறார் என நம்புகிறேன் என்று புருணையில் நடைபெற்ற அங்குள்ள மலேசியர்களுடனான சந்திப்பின்போது துன்  மகாதீர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment