Tuesday, 3 October 2017

"மாங்காய் திருடனை வைரலாக்குறீங்க; மலேசியத் திரைப்படத்தை ஆதரிப்பீர்களா?" - கார்த்திக் ஷாமளன்

ராஜமோகன்

இயக்குனர் கார்த்திக் ஷாமளன் இயக்கத்தில் உருவான 'என் வீட்டு தோட்டத்தில்' திரைப்படம் தற்போது மலேசியத் திரையரங்களில் திரையீடு கண்டு வருகிறது.

திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற போதிலும் மலேசிய ரசிகர்களின் ஆதரவு குறைவாக உள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் இத்திரைப்படம் சில  திரையரங்குகளிலிருந்து நீக்கப்படும் சூழலை எதிர்நோக்கியுள்ளது.
இதனால் ஒரு காணொளியை வெளியிட்டுள்ள கார்த்திக் ஷாமளன், 'என் தோட்டத்தில் திரைப்படம் நாடு தழுவிய நிலையில் திரையீடு கண்டு வருகிறது. இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், படம் வெளியான நான்கே நாளில் கிடைக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் வரும் வியாழக்கிழமையோடு வசூல் கிடைக்க வேண்டிய திரையரங்கிலிருந்து இந்த படம் நீக்கப்படும் என்பதுதான்.

இதற்கு காரணம், கடந்த நான்கு நாட்களாக  குறைந்த ஆட்களே திரையரங்கிற்கு வந்து படத்தை பார்த்துள்ளனர். நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் படத்திற்கு குறைவான ஆட்களே வந்துள்ளதற்கான காரணம் தெரியவில்லை.

மாங்காய் திருடுற வீடியோவையெல்லாம் வைரலாக்குகிறோம். நான் கஷ்டப்பட்டு இந்த படத்தை பண்ணியுள்ளேன். ஒரே ஒருமுறை இந்த படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். இந்த படம் உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் இனிமேல் காலத்துக்கும் நான் எடுக்கும் படங்களை பார்க்க வேண்டாம். ஒரே ஒருமுறை போய் பாருங்கள்.
இந்த வெள்ளிக்கிழமைக்குள் நீங்கள் படத்தை பார்க்கவில்லையென்றால் இன்னும் எத்தனை தியேட்டர்களிலிருந்து போகும் என தெரியவில்லை' என கார்த்திக் ஷாமளன் மலேசிய ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடியோ காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது:

'9ஆம் தேதி வரை காலக்கெடு; இல்லையேல் பேரணி'- வீ. சிவகுமார்

ரா.தங்கமணி

ஈப்போ-
குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளிக்கான புதிய கட்டட நிர்மாணிப்புப் பணி வரும் 9ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படவில்லையென்றால் பேராக் மாநில அரசு செயலகத்தின் முன்பு மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இப்பள்ளிக்கான புதிய கட்டடம்  நிர்மாணிக்கப்படும் என மத்திய அரசாங்கம் 2010ஆம் ஆண்டிலேயே தெரிவித்திருந்த போதிலும் இன்று வரையிலும் அதற்கான அடிச்சுவட்டை காணமுடியவில்லை.
இந்த பள்ளி நிர்மாணிக்கப்படும் நிலம் அடிக்கடி சுத்தம் செய்யும் போதெல்லாம் நிர்மாணிப்புப் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது என கூறப்படுகிறது. இது மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் கையாளும் புது யுக்தியாகும்.

இப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு காண அரசாங்கம் உண்மையிலேயே எண்ணம் கொண்டுள்ளதா? என்பது தெரியவில்லை. இப்பள்ளி விவகாரத்தை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

குனோங் ராப்பாட் பள்ளி புதிய கட்டடம் தொடர்பில் மக்களவையில் கேள்வி எழுப்பும்போதெல்லாம் துணை கல்வி அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் பொய்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார். இவர் கூறியுள்ள இறுதி பொய் கடந்த 28.9.2017இல் பள்ளி கட்டட நிர்மாணிப்புப் பணி தொடங்கும் என்பதுதான். ஆனால் இன்று அதற்கான அடிமட்ட வேலை எதுவுமே தொடங்கப்படவில்லை.
இன்னும் எதற்காக காத்திருக்க வேண்டும்? ஒரு திட்டம் காலதாமதம் ஆகுவதற்கு ஒரு ஏஜென்சி இன்னும் எவ்வளவு காரணங்களைத்தான் அடுக்கும்?

வரும் 9ஆம் தேதிக்குள் இப்பள்ளிக்கான புதிய கட்டட நிர்மாணிப்புப் பணியை தொடங்கவில்லையென்றால் மாநில அரசு செயலகத்தின் முன்பு மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என பேராக் மாநில பக்காத்தான் ஹராப்பானின் செயலாளருமான சிவகுமார் குறிப்பிட்டார்.

'உங்கள் ஆதரவு யாருக்கு?' - அலறும் தொலைபேசியில் ஓர் ஆய்வு

ரா.தங்கமணி

மலேசியா நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் குறித்து எப்போதுமே ஒரு பரபரப்பு நிலவிக் கொண்டே இருக்கிறது. அடுத்த ஆட்சியை யார் அமைப்பது என எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி நிற்கிறது.

இந்த நிலையில் தற்போது 'உங்கள் ஆதரவு யாருக்கு' என்ற கேள்வியோடு ஓர் ஆய்வு உங்களை துரத்திக் கொண்டிருக்கிறது.
உங்களது வீட்டு தொலைபேசி எண்ணுக்கோ கைத்தொலைபேசிக்கோ ஒரு அழைப்பு விடுக்கப்படும். அதில் 'தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஆய்வு நடத்துனர், வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் உங்களது ஆதரவு யாருக்கு? என கேள்வி எழுப்புகிறார்.

உங்கள் ஆதரவு தேசிய முன்னணிக்கு என்றார் எண் 1ஐயும் பக்காத்தான் ஹராப்பானுக்கு என்றார் எண் 2ஐயும் பாஸ் கட்சிக்கு என்றால் எண் 3ஐயும் அழுத்துங்கள் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.

அதோடு, உங்கள் தகவல்கள் ரகசியமாக காக்கப்படும் எனவும்  நீங்கள் வாக்களிக்கும் மாநிலம், இனம், வாக்காளரா? போன்ற பல கேள்விகளோடு இந்த ஆய்வு உங்களை பின் தொடர்கிறது.

ஆகவே, உங்களது வீட்டு தொலைபேசியோ, கைப்பேசியோ அலறினால், பயப்பட வேண்டாம், தெளிவாக பதிலளியுங்கள். ஆனால் 'உஷார்' மக்களே!

Monday, 2 October 2017

மஇகா வேட்பாளர் பட்டியல் பிரதமரிடம் சமர்ப்பிப்பு- டத்தோஶ்ரீ சுப்ரா

கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் களமிறக்கப்படும் வேட்பாளர் பட்டியலை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிடம் மஇகா சமர்பித்துள்ளது என கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் சில வேட்பாளர்களின் பெயர்கள் பிரதமரின் தேர்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் இளம் வாக்காளர்களின் வாக்குகளை கவர்வதற்காக புதுமுக வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மீது மஇகா முழு கவனத்தையும் செலுத்தும் அதே வேளையில் தேமு சார்பில் ஒரே சீரான வேட்பாளர்கல் இடம்பெற வழிவகை காணப்படும்.

மஇகா சமர்ப்பித்திருக்கும் வேட்பாளர் பட்டியலை தேமு தலைவருமான டத்தோஶ்ரீ நஜிப் அங்கீகரிப்பார் என எதிர்பார்க்கின்றோம். இதற்கு பின்னர் இந்த பட்டியல் மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு வேட்பாளரின் பின்னணி குறித்து ஆராயப்படும் என டத்தோஶ்ரீ சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

‘என் வீட்டுத் தோட்டத்தில்’ – திரையரங்கில் அவசியம் பார்க்க 6 காரணங்கள்!


கோலாலம்பூர் உள்ளூர் இயக்குநர் கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், ஜெயா கணேசன், மோகன்ராஜ், கே.எஸ்.மணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும், ‘என் வீட்டுத் தோட்டத்தில்என்ற மலேசியத் திரைப்படம் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்கில் வெளியீடு கண்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படத்தின் முதல் பார்வையில் தொடங்கிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இன்று வரையில் குறையாமல் இருப்பதற்குக் காரணம் அப்படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் தனித்துவம் தான்.


அச்சிறப்புகளை திரையரங்கில் சென்று பெரிய திரையில், மிரட்டலான சத்தத்துடன் பார்த்து ரசித்தால் தான் உணர முடியும்.
எனவே கீழ்காணும் 6 காரணங்களுக்காக நீங்கள் அவசியம் திரையரங்கில் சென்று இத்திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.
1. பயம்.. ஒரு திரில்லர் படத்திற்குச் சென்று விட்டு வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது அல்லவா? அதேவேளையில் திரில்லர் என்ற பெயரில் வெளி வரும் எல்லா திரைப்படங்களும் இந்த அனுபவத்தைக் கொடுத்து விடுவதில்லை. என் வீட்டுத் தோட்டத்தில்நிச்சயமாக இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் ஒரு திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
 2. கதை ஒரு திரைப்படத்தின் கதையுடன் ஒன்றுவதற்கு அத்திரைப்படம் ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்க்கையுடன் ஒத்துப் போக வேண்டும். அப்போது தான் அதில் சொல்லப்படும் விசயத்தை ரசித்து உணர முடியும். அந்த வகையில், இத்திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவம் உலகெங்கிலும் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை முழுமையாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அதிலிருந்து மீண்டும் வருவதற்கு தேவையான ஒன்றையும் இயக்குநர் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

3. நடிப்பு.. மலேசியக் கலைஞர்களின் இசைத் திறமை உலக கவனத்தை ஈர்த்தது போல், நடிப்புத் திறமையும் தற்போது உலகறிந்து வருகின்றது. என் வீட்டுத் தோட்டத்தில்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயா கணேசன், இத்திரைப்படத்தின் மூலம் நிச்சயமாக பல விருதுகளுக்குத் தகுதி பெறுவார். அதுமட்டுமா? சாந்தமும், அன்புமாக வரும் மோகன்ராஜ், மிரட்டலான போலீஸ் அதிகாரிகளாக மகேசன், ஹரிதாஸ், இவர்களோடு அந்த ஓநாய் கதாப்பாத்திரம் ஆகியோரும் நிச்சயம் பேசப்படுவார்கள். ஹவ் டூ யூ ஃபீல் நவ்?” – இந்த வசனம் வரும் காட்சிக்கு கைதட்டல்கள் நிச்சயம்.
4. படத்தின் ஒளிப்பதிவு.. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு வீட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் கேமரா தொழில்நுட்பம், காட்சிப் பதிவு செய்யப்பட்டுள்ள இடங்கள், செட்கள் எனப் பலவற்றையும் பார்த்துப் பார்த்து நுணுக்கமாகச் செய்துள்ளார்கள். படத்தில் இடம்பெறும் அந்த வீட்டிற்காக மாதக்கணக்கில் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படக்குழுவினரின் கடும் உழைப்பை அதனைப் படம் பார்க்கும் போது உணரலாம்.

5. இசை, பாடல்கள் ஷமேசன் மணிமாறனின் பின்னணி இசையும், பாடல்களும் படத்திற்குப் பக்க பலம் சேர்த்திருக்கிறது. 70 விழுக்காடு வசனமே இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் பின்னணி இசை தான் காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுக்கின்றது. அதுமட்டுமின்றி, அர்த்தமுள்ள இரண்டு பாடல்கள். செவியிலே ஒலி விழா’, ‘என் வீட்டுத் தோட்டத்தில்என்ற இரு பாடல்களும் கதையுடன் தொடர்புடைய வரிகளோடு, அதற்கேற்ற இசையோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
6. அனைத்துலக அங்கீகாரம்.. இத்திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு காண்பதற்கு முன்பே, இதுவரை தமிழ்த் திரைப்படங்கள் சென்றிடாத 3 அனைத்துலக திரைப்பட விழாக்களில் இடம்பெற்று நற்பெயர் வாங்கியிருக்கிறது. இத்தனை சிறப்பம்சங்கள் நிறைந்த இத்திரைப்படம் மலேசியக் கலைஞர்களின் கடுமையான உழைப்பில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் வெற்றிக்கரமாக வெளியீடு கண்ட இத்திரைப்படத்தை, திரையரங்கில் சென்று சுமார் 2 மணி நேரம் பயத்தை உணர்ந்து, அனுபவித்து, இறுதியில் அதிலிருந்து மீண்டு, மகிழ்ச்சியோடு வீடு திரும்பலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

என் வீட்டுத் தோட்டத்தில்திரைப்படத்தின் புதிய முன்னோட்டத்தைக் கீழ்காணும் இணைப்பின் வழியாகக் காணலாம்:


'Small Traders' businesses being affected - Unhappy Traders


Kuala Lumpur Okt1-
Small and medium entreprises (SME) Traders are currently looking for some extra income during the upcoming Deepavali festive season. The traders stated that they are facing hard time in trading their goods on normal days and they only managed to earn the expected income during the festive seasons besides from trading in night markets.

     It is undeniable that trading during Deepavali season help them to develop and increase their business while it is being a great platform for the traders to expand their product offerings.

      Though it is known as the correct time to trade their goods, the small traders expressed their unhappiness and dissatisfaction towards act of some authorities who keep filing multiple unnecessary reports to the government against them. As claimed by one of the affected trader, their business has also dropped by 50 to 60% and they hope that the authorities will look into their grievances seriously.

     The traders generating their income by selling necessary goods used during this festive season such as textiles, biscuits and decorative accessories. Meanwhile, they also stated that, they are facing challenges even though the goods are being selling off for reasonable prices based on customer's needs and  the Goods and Services Tax (GST) as well as income tax are being paid accordingly.

     Their businesses also are being affected with the visit of some officers in charge as it makes the customers to think twice before purchasing with them. Lastly, the traders hope that the relevant authorities will look into matter seriously and give a solution to overcome this problems as soon as possible. 

14ஆவது பொதுத் தேர்தல்: இவ்வாண்டு இல்லை?

கோலாலம்பூர்-
அம்னோவின் பொதுப் பேரவை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறுவதை பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதிப்படுத்தியுள்ளதால் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடைபெற வாய்ப்புள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு அம்னோ பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்படலாம் என இதற்கு முன்பு கூறப்பட்ட வேளையில், இவ்வாண்டு பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.

ஆனால் டிசம்பர் 5ஆம் தேதி அம்னோவின் பொதுப் பேரவையை பிரதமர் நஜிப் உறுதிபடுத்தியுள்ளதால் இவ்வாண்டு பொதுத் தேர்தல் இல்லை என்பது தெளிவாகிறது.

இதனிடையே, நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தல் அடுத்தாண்டுதான் நடைபெறும் என துன் மகாதீர் ஆரூடம் கூறியிருந்தார். சபா, சரவாக்கில் தங்களின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் தேசிய முன்னணிக்கு தேவைப்படுவதாலும், அதற்குரிய கால அவகாசம் அவர்களுக்குத் தேவைப்படுவதாலும், பொதுத் தேர்தல் அடுத்தாண்டுதான் நடைபெறும் என மகாதீர் இதற்கு முன்பு கூறியிருந்தார்.

லஞ்ச ஊழலில் சிக்கும் தனிநபர்களுக்கு பொது மன்னிப்பு- டத்தோ அம்பிகா முன்மொழியும் திட்டம்

கோலாலம்பூர்-
நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சம் போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்கு லஞ்ச ஊழலில் சிக்கும் தனிநபர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கும் திட்டத்தை டத்தோ அம்பிகா சீனிவாசன் முன்மொழிந்திருக்கிறார்.

அதிகளவில் பெருகி வரும் இத்தகைய குற்றத்தை தவிர்ப்பதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். மலேசியர்களின் வாழ்க்கையில் முக்கிய அம்சமாகி விட்ட லஞ்சம், அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதனை தடுப்பதற்கு ஏதுவாக லஞ்ச ஊழலில் சிக்குபவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டு, முறைகேடாக சம்பாதித்த சொத்துகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைக்கலாம் என தம்முடைய பொது மன்னிப்பு ஆலோசனை திட்டத்தை அவர் விவரித்தார்.

லஞ்சம் ஒரு தவறான செயல் என்பதையே மலேசியர்கள்  மறந்து விட்டனர். லஞ்ச ஊழலில் சிக்கும் தனிநபர்கள் தாங்கள் செய்த தவற்றை ஒப்புக்கொண்டு முறைகேடாக சம்பாதித்தவற்றை திரும்ப ஒப்படைக்க முன்வந்தால் அவர்களுக்கென பொது மன்னிப்பின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. கீழ் நிலையில் உள்ள மக்களும் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புண்டு என மனித உரிமை போராட்டவாதியும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசன் சுட்டிக் காட்டினார்.

'En Veetu Thothathil - The Farm' - Who is the * antagonist * ???


The very first Malaysian Tamil slasher thriller movie in Malaysia entitled 'En Veetu Thothatil-The Farm' directed by Karthik Shamalan  is currently haunting the nearby theatres started from 28th September. The expectation that triggered the public two years back through the first look of this movie, made the public's expectation about the movie to increase day by day and became one of the most awaited movie of the year. Listed below are the main reasons why one should not missed to watch this amazing movie in the big screen:

1. Fear  It is for sure everyone will enter the theatre with curiosity mix with feel of fear as the first look poster and teaser itself had created the feel among the audience. Not all the thriller genre movies can create this feel among the audience as many failed to do so. But is it undeniable that EVT - The farm, will keep you on the edge of your seat throughout the movie. Wish to take a challenge?


2. Storyline  The storyline of a movie plays  the most crucial role in terms of production where it will bring the movie to the next level. In order to make the  storyline aspiring and attract the audience, it is important to make sure the storyline is somehow closely related to our personal life. EVT never fail to assure the audience to glue to their seats until end of the movie by creating this movie which delivers an important message to the audience. It probably create an awareness among the audience that the truth revealed in this story might happen anytime to anyone in any circumstances of event and it needs a strong courage to overcome this  nightmare in life. So what are you waiting for? Grab a ticket to witness the nightmare.


3. Acting In terms of acting, each and every cast of this movie played a fabulous role by giving as tounding acting throughout the movie to prove that Malaysian directors are capable of producing world class movies. Entire casting crew had put in their full effort and managed to give an amazing performance. The wolf character performed very well and his performance  stirred the fear among the audience throughout the movie. Jaya Ganeson played a leading role in this movie together with Moganraj, Magesan and Haridhass. It is known that EVT movie only has 30% dialogues and 70% of pure sheer performance and action.


4. Cinematography It is believed that the set for the trap house was built with 30 different door and room just to bring out the realism of a trap house.


5. Music The music of this movie has been the star of this film. Oli Vizha song and Shameshan Mani Maran's BGM of this whole  movie brought the audience to different era. Without music,  the plot of the script would not have worked well. Not forgetting Yuwarajah Krishnan's magical lyrics which bring life to the song.

6. International Recognition  EVT - The Farm was selected in 3 different International Film Festival and received applause while chosen as opening Gala Premiere for one of the International Film Festival. The whole team definitely deserves applaud and respect for coming out with such an amazing story.


En Veetu Thothathil - The Farm, a simple but intense story with good acting and it is undeniable that the crew pulled out a great job. Appreciate the good works and support the quality film. Haven't watch the movie yet? Don't miss it. Go and watch the movie in nearby theatres before its too late. Do watch the trailer of this movie before watching the whole movie in order to have an assumption about the movie.


Click the link below to have a look on the trailer :

'Thottam' - A truly Malaysian story


 'Thottam' a movie fully based about village life, directed by Arangkannal Rajoo, will be hitting the big screens real soon. The entire team believes that this movie will evoke a nostalgic moment among audience as it will reminisce the good old memories of those who have experienced a village life before. The audio launch of this movie has been held at the Auditorium of Tan Sri  Soma recently. It was privileged for the entire team to inform that this movie has been selected for special screening at 8th Norway Film Festival.


     The storyline of 'Thottam' movie will be portraying the lifestyle and barriers faced by the village people back in 19th century. It will bring a great opportunity for the younger generation to   have a clear picture of living in a village area and the challenges faced by the village people those days.


    Besides, the director also wishes to dedicate this amazing movie for the Indian community who sacrificed their life and faced a difficult time during the British colonial period 200 years back where thousands of Indians were brought in as indentured (contract) workers to work in various plantations across British Malaya. 'Thottham' team strongly believes that this movie will definitely recall back the memories about Malaysian Indian's lifestyle before gain independence.


   Sree Sai Dev worked as the music director of this movie while the late legends Na.Muthukumar and Annamalai has been the lyricist for the wonderful songs in this movie. As giving respect and mourn the passing of this two great lyricists, there has been one minute of silence during the audio launch of this movie.

    The audio launch which was organised by Revvind Production in a short period of time, successfully gathered numbers of Malaysian artists such as K.S. Maniam, ST Bala, THR Raaga Kavimaran, M.S.K. Selvamary, Elango Annamamalai, Dato Subash and many more.

14ஆவது பொதுத் தேர்தல்: அம்னோவை வீழ்த்துவதே நமக்கு முக்கியம்- சிவகுமார்

ரா.தங்கமணி

ஈப்போ-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் நமது எதிரி ம இகாவோ, மசீசவோ,  கெராக்கானோ கிடையாது; மாறாக பக்காத்தானின் பொது எதிரி அம்னோ மட்டுமே என  பேராக் மாநில பக்காத்தான் ஹராப்பானின் செயலாளர் வீ.சிவகுமார் குறிப்பிட்டார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பானுக்கு மிக முக்கியமானது ஆகும். இந்த தேர்தலில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்திடும் தேசிய முன்னணிக்கு முடிவு கட்டும் தேர்தலாக அமைந்திடும் இதில் பக்காத்தான் ஹராப்பான் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.
இந்த தேர்தலில் நமது (பக்காத்தான் ஹராப்பான்) பொது எதிரி அம்னோ மட்டுமே. மஇகாவோ, மசீசவோ, கெராக்கானோ எதுவுமே நமது எதிரி கிடையாது. ஏனெனில் அவர்கள் எல்லாம் ஏற்கெனவே மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள். பலம் இழந்த இந்த கட்சிகளை எதிர்ப்பதை விட இன்னும் அதிகாரம் செலுத்தும் அம்னோவை வீழ்த்துவதே நமக்கு முக்கியமானதாகும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய சூழல் மோசமான சூழலில் அமைந்திருப்பதோடு மக்களும் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்குவதில் தேசிய முன்னணி தவறி விட்டது.

மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே பெரும் அவதிபடுகின்றனர். அந்தளவு மக்களின் சுமை அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி  வரி, பொருட்களின் விலை உயர்வு உட்பட பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் வரும் பொதுத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்கள் போடும் ஒவ்வொரு வாக்கையும் சிந்தித்து போட வேண்டும் என சிவகுமார் குறிப்பிட்டார்.

மெங்கிளம்பு, ஃபாலிமில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற பத்துகாஜா ஜசெக  விருந்துபசரிப்பு நிகழ்வில் பூச்சோங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதிராவ் உட்பட ஜசெக உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

Sunday, 1 October 2017

29 சிறு தொழில் வர்த்தகர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு


ஸ்ரீகெம்பாங்கான் அக்1-
சிறு தொழில் வர்த்தகர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் எஸ்.எம்.பி எனும் சிறு தொழில் வர்த்தகர்களுக்கான விருது விழா மிக சிறப்பாக அண்மையில் ஸ்ரீ கெம்பாங்கான், பெலாஸ் அஃப் கோல்டன் ஹோர்ஸில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு மலேசிய இந்திய வர்த்தகர் வலையமைப்பு (1மைன்) சங்கத்தின் தலைவர் டத்தோ கோபிநாத், இயக்குநரும் தயாரிப்பாளருமான சி.குமரேசன், ஏ.கே.எஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ ஏ.கே.எஸ். சக்திவேல், பெலாஸ் அஃப் கோல்டன் ஹோர்ஸின் மூத்த இயக்குனர்  மணிராஜா மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு வருகையாளித்தனர்.


இந்த விருது விழாவை ஒவ்வொரு ஆண்டும் விவி கிரேண் எண்டர்டெண்மட் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டு 6ஆவது ஆண்டாக ஏற்பாடு செய்வதில் பெருமைக்கொள்வதாகவும் இது இனி தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தப்படும் என்று இந்நிகழ்வின் ஏற்பாடு குழுத் தலைவர் ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.


மேலும், 29 சிறு தொழில் வர்த்தகர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வர்த்தகத்தில் எதிர்க்கொண்ட சாவல்களை காணொளியாக வருகையாளர்களுக்கு ஒளிப்பரப்பட்டது.


இந்தியர்கள் வர்த்தகத்தில் சிறப்பான முறையில் வளம் வரவேண்டும். முறையான வர்த்தாக செயல் திட்டங்கள் அமைத்து ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வர்த்தகத்தில் புதுமைத்துவத்தையும் உருமாற்றத்தைவும் கொண்டு வரவேண்டும். வர்த்தகத்தில் முறையாக அணைத்து பத்திரங்களும் இருந்தால் அரசாங்கம் உங்களின் வர்த்தகத்திற்கு துணை புரிவார்கள் எனவும் வாழ்க்கையே சரியாக திட்டமிட்டு வர்த்தகத்தில் வளம் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம் எனவும் டத்தோ கோபிநாத் தலைமையுரையில் தெரிவித்தார்.


சிறு தொழில் வர்த்தகர்களின் வாய்ப்புகளுக்கு இடையுறு –சிறு தொழில் வர்த்தகர்கள் கண்டனம்


கோலாலம்பூர் செப்30-
சிறு தொழில் வர்த்தகர்கள் தங்களின் தினசரி வியாபாரத்தை பெரிய அளவில் செய்ய வாய்ப்பில்லாம்மல் அவர்கள் தீபாவளி மற்றும் ஆலய திருவிழா காலங்களிலும் இரவுச் சந்தைகளிலும் தங்களின் வியாபாரத்தைச் செய்து தங்களின் வர்த்தகத்தை மேம்படுத்தி வருகின்றனர். இதற்கு தீபாவளி சந்தை பெரும் பாங்காற்றி வருகிறது என்றால் அதுமிகையாகாது.

இது போன்ற வர்த்தக சந்தைகள் வழி மட்டுமே அதிகமான வியாபாரங்களும் வியாபாரிகளுக்கும் வாய்ப்புகள் அமைகின்றன. ஆனால் இதனை தடுப்பதற்கும் பொதுமக்களின் வருகையே பாதிப்பு செய்யும் வகையில் சில தரப்புகள் சிறு தொழில் வர்த்தகர்களுக்கு எதிராக அரசாங்கத்தில் செய்யும் தேவையற்ற புகார்கள் எங்களுக்கு மண வருத்தத்தை அளிக்கின்றது என்று பாதிக்கப்பட்ட சிறு தொழில் வர்த்தகர்களில் ஒருவர் தெரிவித்தார்.

தீபாவளி சந்தைகளில் நாங்கள் வியாபாரம் செய்வது பெரிய அளவில் பணம் சம்பாரிக்கவில்லை. நாங்கள் சட்டை, பலகாரங்கள், தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்து வருகின்றோம். இதில் கிடைக்கப்பெறும் வருமானத்தை நாங்களும் அராசங்கத்திற்கு ஜி.எஸ்.டி, அரசாங்க வரி என அனைத்தையும் சரியாக செலுத்தியும் எங்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.




வியாபார காலங்களில் அதிகாரிகள் வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்குவதால் எங்களின் வியாபாரங்கள் பாதிப்படைக்கிறது.
குறைவான விலையிலும் மக்களின் வசதிக்கு உற்பட்டு அதிகமான விலைகள் இல்லாமல் குறிப்பிட்ட இலபத்தில் எங்களின் வர்த்தகத்தை செய்து வருகின்றோம்.

இக்காலக்கட்டத்தில் சில தரப்புகள் செய்யும் இடையூறுகளை அரசாங்க அதிகாரிகளும் மாநில அரசாங்கமும் கண்டறிந்து எங்களின் வியாபரத்தை செய்ய வழிவகுக்குமாறு வியாபாரிகள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டனர்.