Saturday 3 April 2021

தேமுவில் மஇகா; உறவு நீடிக்க வேண்டும்-டத்தோஶ்ரீ ஸாயிட்

ரா.தங்கமணி 

கிள்ளான் -

1947இல் தொடங்கப்பட்ட மஇகா இன்றுவரையிலும் அம்னோ, தேசிய முன்னணியுடன் தொடர்ந்து கொண்டிருக்கும்  உறவு இனிவரும் காலங்களிலும் நீடிக்க வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி குறிப்பிட்டார்.

10 தேசியத் தலைவர்களை கடந்து வந்துள்ள மஇகா இக்கட்டான காலகட்டத்திலும் அம்னோவுடன் நட்புறவை பாராட்டி வந்துள்ளது. 2018 பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையிலும் தேமுவின் உறுப்புக் கட்சியாக தொடர்ந்து நீடிக்கும் நிலைப்பாட்டை மஇகா கொண்டிருந்தது. 

இதே சூழலில் வரும் 15ஆவது பொதுத் தேர்தலையும் எதிர்கொண்டு ஒரு வலுவாக கூட்டணியாக மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் இலக்கை வென்று காட்டுவோம் என்று மஇகாவின் 74ஆவது பொதுப் பேரவையை இயங்கலை வழி தொடக்கி வைத்த தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஶ்ரீ ஸாயிட்  ஹமிடி குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment