Saturday 3 April 2021

10% தொகுதிகளை விட்டு கொடுக்க அம்னோ தயாரா? - டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் காட்டம்

ரா.தங்கமணி 

கிள்ளான் -

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற தேமுவின் உறுப்புக் கட்சிகள் தங்களின் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் அம்னோவும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகாவுக்கு இருப்பதே 9 நாடாளுமன்றத் தொகுதிகள் தான். அதிலும் 35 விழுக்காடு தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் அம்னோவும் குறைந்தது 10 விழுக்காடு தொகுதிகளை விட்டுக் கொடுக்க முனைய வேண்டும்.

அதை விடுத்து நாங்கள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கடந்த காலங்களில் தேமுவின் முடிவுக்கு கட்டுப்பட்டு சில முடிவுகளை மஇகா ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் கண்மூடித்தனமாக அனைத்து விவகாரங்களையும் ஏற்றுக் கொண்டிருக்க முடியாது. இந்திய சமுதாயத்தின் பிரதான கட்சியாக விளங்கும் மஇகா, இந்திய சமுதாயத்தின் நலனுக்காக சில முடிவுகளை தீர ஆராய்ந்து எடுக்க தயாராகி உள்ளது.

அதற்கேற்ப தேமு கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெறும் சூழலில் தொகுதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் மஇகா அதற்கு தயாராக உள்ளது. அதே வேளையில் அம்னோவும் தொகுதியை பகிர்ந்து கொள்வதற்கு தயாராக வேண்டும். 

9 நாடாளுமன்றத்  தொகுதிகளில் 35 விழுக்காடு தொகுதிகளை விட்டுக்  கொடுத்தால் வரும் தேர்தலில் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே போட்டியிடக்கூடும்.

அம்னோ மட்டும் தங்களது தொகுதிகளை தற்காத்து மஇகாவை தொகுதிகளை விட்டுக் கொடுக்கச் சொன்னால் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் வினவினார்.


No comments:

Post a Comment