Wednesday 4 November 2020

சிம்பாங் லீமா இடுகாடு ஒருநாள் மட்டுமே மூடப்படும்- தேவன்

ரா.தங்கமணி

கிள்ளான் - 

தீபாவளி பெருநாளை முன்னிட்டு கிள்ளான், சிம்பாங் லீமா இடுகாடு ஒரு நாள் மட்டுமே  மூடப்படுவதற்கு கிள்ளான் நகராண்மைக் கழகம் இணக்கம் கண்டுள்ளது என்று இந்திய சமூகத் தலைவர் தேவன் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 14, 15ஆம் தேதிகளில் சிம்பாங் லீமா இடுகாடு மூடப்படும் என்று வெளியான தகவல் இந்திய சமூகத்தின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஒருவரின் மரணத்தை யாராலும் தீர்மானிக்க முடியாது. அதுவும் பண்டிகை காலங்களில் இதுபோன்றதொரு துயரச் சம்பவம் நிகழ்ந்தால் அது சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை வேதனைக்கு ஆட்படுத்தும். இத்தகைய சூழலில் இரு தினங்களுக்கு இடுகாட்டை மூடுவது இறந்தவரை அடக்கம் செய்வதிலும் இறுதிக் காரியங்களை செய்வதிலும் பெரும் சிரமத்தை எதிர்நோக்கக்கூடும். 

அதுமட்டுமல்லாது இங்குள்ள பெரும்பாலானோருக்கு சிம்பாங் லீமா இடுகாடே இலகுவானதாகும். அதுவும் சிஎம்சிஓ காலகட்டத்தில் இறந்தவரின் உடலை கொண்டு வெகு தூரத்திற்குச் செல்ல முடியாது என்பதால் இவ்விவகாரம் குறித்து கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் சுகாதாரப் பிரிவு இயக்குன்  அஸ்மியுடன் பேச்சுவார்தை நடத்தப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் 14ஆம் தேதி  மட்டுமே இடுகாட்டை மூடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என்று தேவன் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது Shah Alam Casket நிறுவனத்தின் தலைமை நிர்வாகி குணேந்திரன் கைலாசம், கம்போங் ஜாவா இந்திய சமூகத் தலைவர் தேவன் வெள்ளையன், மனிதநேய ஒற்றுமை இயக்கத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் செல்வகுமார் ஆகியோரும் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment