Friday 6 November 2020

இபிஎஃப் முதல் கணக்கிலிருந்து வெ.6,000 மீட்டுக் கொள்ளலாம்- நிதியமைச்சர்

கோலாலம்பூர்-

ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இபிஎஃப்) உறுப்பினர்கள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கி முதலாவது கணக்கலிருந்து மாதத்திற்கு 500 வெள்ளி என 12 மாதத்திற்கு 6,000 வெள்ளியை மீட்டுக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை (பட்ஜெட்) மக்களவையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் தெங்கு ஷஃப்ருல் அப்துல் அஸிஸ் இதனை அறிவித்தார்.

இதன் மூலம் i-Lestari எனும் திட்டத்தின் வாயிலாக முதல், இரண்டாவது கணக்கிலிருந்து மொத்தம் 12,000 வெள்ளியை அதன் உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது அறிவிக்கப்பட்ட திட்டத்தின் வாயிலாக நிதிச்ச்மையை எதிர்கொண்டுள்ள 600,000 உறுப்பினர்கள் இதன்வழி பயனடைவர்.

ஜனவரி மாதம் தொடங்கி இந்த நிதி உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் சொன்னார்.


No comments:

Post a Comment