ரா.தங்கமணி
ஷா ஆலம்-
மனுகுலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கோவிட்-19 பாதிப்பு நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசியல் சர்ச்சைகளை கைவிட்டு மக்கள் நலனில் அனைத்துத் தரப்பினரும் அக்கறை கொள்ள வேண்டும் என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் தலைமைச் செயலாளர் ரா.ஆனந்தன் வலியுறுத்தினார்.கோவிட் -19 பாதிப்பு நாட்டில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும். இந்த வைரஸ் பரவினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு பலர் வேலை வாய்ப்புகளையும் இழந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் மக்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவதை அரசாங்கம் மட்டுமல்லாது பிற அரசியல் தலைவர்களும் பின்பற்ற வேண்டும்.
எப்போதும் அரசியல் சர்ச்சைகளுக்கு மதியில் மக்களை பீதிக்குள்ளாவதை தவிர்த்து விட்டு இக்கட்டான கோவிட் காலத்தில் மக்கள் நலனின் அக்கறை செலுத்த வேண்டும்.
அதேபோன்று வேலை வாய்ப்புகளை இழந்து பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள வறுமைக்கோட்டில் வாழும் மக்களுக்கு கூடுதல் உதவித் திட்டங்களை அமல்படுத்துவதன் வழி அவர்களின் குடும்பச் சுமையும் அதனால் ஏற்படும் மன உளைச்சலுக்கும் ஒரு தீர்வு காணப்படும் என்று ஆனந்தன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment