கோலாலம்பூர்-
புதியதொரு அரசாங்கம் அமைப்பதாக அறிவித்துக் கொண்ட பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் கூட்டணியில் மஇகா இடம்பெற்றிருக்கவில்லை என்று அக்கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தாம் கொண்டிருப்பதாகவும் பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் பெரும்பான்மை இழந்து விட்டதால் புதிய அரசாங்கத்தை அமைக்க மாமன்னரை சந்திக்கவிருப்பதாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
ஆனால், தேசிய முன்னணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் டான்ஶ்ரீ முஹிடின் யாசினுக்கே முழுமையான ஆதரவை வழங்குவதால் மஇகா அதே முடிவை பின்பற்றவிருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முடிவெடுத்துள்ளார்.
டத்தோஶ்ரீ அன்வாரை ஆதரிப்பதற்கான எந்தவொரு பரிந்துரையையும் மஇகா பெறவில்லை எனவும் டான்ஶ்ரீ முஹிடினுக்கே மஇகா தொடர்ந்து ஆதரவு வழங்கும் எனவும் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment