கோலாலம்பூர்-
ஜசெக தேர்தலில் தோல்வி அடைந்த பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி கட்சியின் மத்திய நிர்வாக செயற்குழு (சிஇசி)உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் தேர்தலில் 359 வாக்குகள் பெற்று பேராசிரியர் தோல்வி அடைந்தார். 1,356 பேராளர்கள் வாக்களித்த தேர்தலில் பேராசிரியர் இராமசாமியின் தோல்வி இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களில் எதிரொலித்த இந்திய சமுதாயத்தின் அதிருப்தியை உணர்ந்துள்ள கட்சி தலைமைத்துவம் பேராசிரியர் இராமசாமியை மத்திய நிர்வாக செயல்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளது.
Friday, 24 November 2017
Thursday, 23 November 2017
"கதவுகளை உடைக்காதே"- திருடனிடம் மன்றாடும் வணிகர்கள்
கிள்ளான் -
திருடன் ஒருவனின் கைவரிசையால் பெரும் நஷ்டத்தை அடையும் வணிகர்கள் 'கதவுகளை உடைக்காதே' என அவனிடம் மன்றாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கறுப்பு நிறச் சட்டை, தலைகவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து நள்ளிரவு, அதிகாலை வேளையில் கடைகளின் கதவையும் பூட்டையும் உடைத்து திருடும் கொள்ளையனால் நஷ்டத்தை எதிர்நோக்குவதாக வணிகர்கள் புலம்புகின்றனர்.
பண்டார் புக்கிட் திங்கி, தாமான் பாயூ பெர்டானா, பண்டார் பொத்தானிக், செளதர்ன் பார்க், தாமான் செந்தோசா ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கடந்த மூன்று மாதங்களில் 100க்கும் மேற்பட்ட நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்களது கடையின் கதவையும் பூட்டையும் உடைத்து திருடப்படுவதால் கதவுகளுக்கும் பூட்டுகளுக்குமே அதிகம் செலவிடுவதாகவும் இதனால் வருமானத்தைக் காட்டிலும் இதற்கே அதிகம் செலவாகிறது என புலம்பும் வணிகர்கள், திருடனிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
"கடைகள் திறந்துதான் உள்ளன. உள்ளே எந்த பொருளும் இல்லை. தயவு செய்து கதவுகளை உடைக்காதே" என வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை தங்களது கடைகளில் தொங்கவிட்டுள்ளனர்.

அதிகார துஷ்பிரயோகங்கள் அனைத்தும் விசாரிக்கப்படும்- லிம்
பெட்டாலிங் ஜெயா-
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்தால் அதிகார துஷ்பிரயோகச் செயல்கள் அனைத்து விசாரிக்கப்படும் என ஜசெகவின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்தார்.
முன்பும் இப்போதும் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிகார துஷ்பிரயோகச் செயல்கள் மீது விசாரணை நடத்தப்படும் என இளம் தலைமுறைகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றில் லிம் கிட் சியாங் இவ்வாறு கூறினார்.
எதிர்க்கட்சியான பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை கைப்பற்றினால் தவறு இழைத்துள்ள துன் மகாதீர் மீது விசாரணை மேற்கொள்ளப்படுமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் துன் மகாதீர் இடம்பெற்றுள்ளார்.
இந்நிகழ்வின்போது லிம் கிட் சியாங் அருகில் துன் மகாதீர் அமர்ந்திருந்தார்.
வீட்டு வாடகை, பள்ளி கட்டணம் போன்ற கடனில் சிக்கி தவித்தார் சிவராவ்- போலீஸ் தகவல்
சுங்கைப்பட்டாணி-
வீட்டு வாடகை, பிள்ளைகளின் கல்வி கட்டணம் செலுத்தாமை உட்பட பல கடன் பிரச்சினைகளில் சிவராவ் திண்டாடி வந்துள்ளார் என விசாரணை வாயிலாக தெரிய வந்துள்ளது.
நாட்டையே உலுக்கியுள்ள மூன்று பிள்ளைகளை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தில் சிவராவ் வீட்டு வாடகையைக் கூட கட்ட முடியாத சூழலை எதிர்கொண்டுள்ளார்.இரண்டு மாடி வீட்டில் கடந்த ஆறு வருடங்களாக அவர் வசித்து வந்துள்ளார்.
அதோடு மூன்று பிள்ளைகளின் கல்வி கட்டணத்தையும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார் என கோலமூடா சிஐடி தலைவர் துணை ஆணையர் மியோர் ஃபாரிட் அலாத்ராஷ் தெரிவித்தார்.
வங்கியில் பறிமுதல் செய்யப்பட்ட காரை கூட மீட்டெடுக்க முடியாத சிவராவ், அதிக கடன்களால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அதனை சமாளிக்க முடியாமலேயே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன, அவரது மரணத்தில் உள்ள பின்னணியில் கடன் தொல்லைதான் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு சிவராவின் மனைவி திருமதி காமினி தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெ.230 மில்லியன்: இந்தியர்களை ஏமாற்றுகிறாரா பிரதமர்?- சிவகுமார் கேள்வி
கோலாலம்பூர்-
பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்ட 'செடிக்' பிரிவுக்கு வழங்கப்பட்ட 230 மில்லியன் வெள்ளி உண்மையிலேயே உதவி தேவைப்படும் இந்திய சமூகத்தை சென்றடைந்ததா? என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
இந்திய சமூகத்திற்காக செடிக் பிரிவின் மூலம் 230 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அறிவிப்பு ஓர் ஏமாற்று வேலையாகும்.
செடிக் மூலம் வழங்கப்பட்ட நிதி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆதாரப்பூர்வமான தகவலை வழங்குவதில் பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தோல்வி கண்டுள்ளதே பெரும் கேள்விகளை எழுப்புகிறது.
இந்திய சமுதாயத்திற்காக முன்பு மஇகாவின் மூலமாகவே நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனாலும், அந்த நிதி ஒதுக்கீடுகள் இந்திய சமுதாயத்தை சென்றடையாததன் விளைவாக இந்தியர்கள் கோபம் கொண்டனர். அந்த கோபத்தின் வெளிப்பாடகவே தேசிய முன்னணி இந்தியர்களின் ஆதரவை பெருமளவு இழந்தது.
அதனை தொடர்ந்து, செடிக் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் மூலம் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும், செடிக் அமைப்பும் மஇகாவின் கைப்பாவையாகவே மாறிவிட்டது.
2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது 2014 முதல் தற்போது வரை 230 மில்லியன் வெள்ளி செடிக் அமைப்பின் மூலம் இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் வழி, 5 லட்சம் இந்தியர்கள் பயனடைந்துள்ளனர் என டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார். இது உண்மையானதா?
அந்த 230 மில்லியன் வெள்ளி இந்திய சமுதாயத்தை சென்றடையாத நிலையில் பிரதமர் இந்திய சமுதாயத்தை ஏமாற்றுகொண்டிருக்கிறார். உண்மையிலேயே செடிக் அமைப்பின் நிதி பெரிய திட்டங்களின் மூலம் பெரும்புள்ளிகளுக்கு சென்றடைந்துள்ளது.
இன்னமும் மஇகா தலைவர்கள் இந்திய சமுதாயத்தை ஏமாற்றி கொண்டிருப்பது தொடர்கதையாக வேண்டுமா? என ஓர் அறிக்கையின் வாயிலாக சிவகுமார் இவ்வாறு கூறினார்.

Wednesday, 22 November 2017
கழுத்து இறுக்கப்பட்டதால் சிவராவ் மரணம் - சவப்பரிசோதனையில் உறுதி
சுங்கைப்பட்டாணி-
மூன்று பிள்ளைகளை கொன்று தானும் தூக்கில் தொங்கியதாக நம்பப்படும் கே.சிவராவின் கழுத்து இறுக்கப்பட்டதாலேயே அவர் மரணமடைந்தார் என பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில குற்றப்புலனாய்வு பிரிவுத் தலைவர் துணை ஆணையர் மியோர் ஃபாரிட் அலாத்ரஷ் தெரிவித்தார்.
5 வயது முதல் 8 வயது வரையிலான மூன்று பிள்ளைகளையும் தலையணை அழுத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சிவராவின் பிரேதப் பரிசோதனை கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் மூன்று சிறார்களில் பிரேதப் பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக அவர் சொன்னார்.
நேற்று மதியம் 1.30 மணியளவில் தனது வீட்டின் அறையில் பிள்ளைகளும் தந்தையும் இறந்துக் கிடக்கக் காணப்பட்டார்.
கடன் தொல்லை காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படும் வேளையில் இதற்கான காரணத்தை போலீசார் ஆராய்வர் என அவர் சொன்னார்.
'தொகுதி தேமு தலைவர் பதவியை விட்டு கொடுத்ததில் தவறேதும் இல்லை'- இளங்கோ
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் தேசிய முன்னணி தலைவர் பதவி என்பது நமது கைநழுவி சென்றுவிடவில்லை. மாறாக தோல்வி அடைந்த நம்மிடம் இருப்பதை விட வெற்றியடைந்த அம்னோவிடம் தற்போது இருப்பதில் தவறேதும் இல்லை என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.
கடந்த இரு தவணைகளாக இங்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய தேசிய முன்னணி வேட்பாளர்களிடம் (மஇகா பிரதிநிதிகள்) தொகுதி தேமு தலைவர் பதவி வகிப்பதை விட லிந்தாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்னோ பிரதிநிதி இப்பதவி வகிப்பது தவறொன்றும் ஆகாது.
ஓர் அமைச்சர், ஒரு துணை அமைச்சர் ஆகியோரை தோற்கடிக்கச் செய்துவிட்டு தொகுதி தேமு தலைவர் பதவி குறித்து விமர்சனங்களையும் குறைகூறல்களையும் எழுப்புவது நியாயமாகாது.
தற்போது அம்னோவிடம் இருக்கும் இப்பதவியை மீண்டும் மஇகா கைப்பற்றுவது பெரிய விவகாரமல்ல. அதற்கு வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என 'பாரதம்' மின்னியல் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் இளங்கோ தெரிவித்தார்.
அவருடனான சிறப்பு நேர்காணல் 'நாளை' இடம்பெறும்.

பேராக் அரசு ஊழியர்களுக்கு வெ.2,000 சிறப்பு நிதியுதவி
ஈப்போ-
பேராக் அரசு ஊழியர்களுக்கு 2,000 வெள்ளி சிறப்பு நிதி வழங்கப்படும்
என மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
இந்த நிதி உதவி இரு தவணைகளாக வழங்கப்படும். முதல் கட்டமாக அடுத்த
மாதம் 1,000 வெள்ளியும் அடுத்தாண்டு கொண்டாடப்படும் நோன்பு பெருநாளின் போது எஞ்சிய
1,000 வெள்ளியும் வழங்கப்படும் என இன்று நடைபெற்ற மாநில பட்ஜெட் தாக்கலின் போது மாநில
மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் தெரிவித்தார்.
இந்த சிறப்பு நிதி உதவியானது தேசிய முன்னணி அரசு நிர்வாகத்தின்
நன்றியை புலப்படுத்தும் விதமாக வழங்கப்படுகிறது என்றார் அவர்.
'நம்ப முடியவில்லை': கடன் பிரச்சினையால் கொலை ; தற்கொலையா? - சகோதரர் வேதனை
சுங்கைப்பட்டாணி-
மூன்று பிள்ளைகளை கொன்று தனது அண்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கு 'கடன் பிரச்சினை' என கூறப்படுவதை தம்மால் நம்ப முடியவில்லை என மரணமடைந்த சிவராவின் சகோதரர் லோகன்ராவ் தெரிவித்தார்.
நேற்று தனது வீட்டின் அறையில் மூன்று பிள்ளைகளை கொன்று அதே அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் கே.சிவராவ் (வயது 48).
இச்சம்பவத்தில் சி.சஷ்வின் ராவ் (வயது 6), சி.ரகுராம் ராவ் (வயது 5), யகிமா ஶ்ரீ (வயது 8) ஆகியோர் தலையணை கொண்டு மூச்சுத் திணறச் செய்ததால் மரணமடைந்தனர்.
இந்த கொலை, தற்கொலைச் சம்பவத்திற்கு கடன் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என போலீஸ் தெரிவித்தது.
ஆயினும் கடன் பிரச்சினையால் தனது மூன்று பிள்ளைகளையும் கொன்று தனது சகோதரர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதை நம்ப முடியவில்லை.
'கடந்த மாதம் அவரை அக்காவின் வீட்டுக்கு அருகில் பார்த்தேன். அப்போது அவர் சகஜமாகவே இருந்தார். அவர் ஏதேனும் கடன் பெற்றுள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை'.
அவர் பணப் பிரச்சினையை எதிர்நோக்கினார் என்பதை நம்ப முடியவில்லை; வீட்டு வாடகையை கூட சிறப்பான முறையில் செலுத்தி வந்தார் என இன்று நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து விவரித்த மாநில குற்றப்புலனாய்வு பிரிவின் தலைவர் துணை ஆணையர் மியோர் ஃபாரிட் அலாத்ராஷ் வாஹிட், சம்பந்தப்பட்ட ஆடவர் தூக்கிட்டுக் கொண்டதால் மரணமடைந்தார் என சவப்பரிசோதனை முடிவில் கூறப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று சிறார்கள் மரண அறிக்கை ஆய்வியல் கூடத்தில் நிலுவையில் உள்ளது என்றார் அவர்.
இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மண் சரிவு: 11 கார்கள் பாதிப்பு
செர்டாங் -
பெரிய கால்வாயை நோக்கி மண் சரிய ஆரம்பித்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 11 கார்களும் கால்வாயில் விழுந்து சேதமடைந்தன. இச்சம்பவம் செர்டாங், தாமான் லெஸ்தாரி பெர்டானாவில் நிகழ்ந்தது.
இந்த மண் சரிவினால் அங்குள்ள கட்டடங்களுக்கு பாதிப்பு ஏதும் நேரவில்லை என்பதோடு எவ்வித உயிருடற்சேதங்களும் ஏற்படவில்லை.
இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு எட்டு தீயணைப்பு அதிகாரிகள் இரண்டு தீயணைப்பு வண்டிகளில் விரைந்தனர். அப்பகுதியில் விசாரணை நடத்தும் பொருட்டு, பொதுமக்கள் யாரும் அங்குச் செல்லக் கூடாது என்றும், அச்சம்பவம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விட்டதாகவும் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை துணை இயக்குனர் முகமட் சானி ஹரூல் தகவல் தெரிவித்தார்.

3 பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை: நெஞ்சை உலுக்கும் துயரம்
சுங்கைப்பட்டாணி-
20 நாட்களுக்கு முன்னதாக மனைவி இறந்த வேளையில் மூன்று பிள்ளைகளை கொன்று கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த இத்துயரச் சம்பவத்தில் எஸ்.ரகுராம் (வயது 5), எஸ்.ஷஷ்ரீன் ராவ் (வயது 6), யமூனா (வயது 8) ஆகியோர் பெர்டானா ஹைட்ஸிலிலுள்ள தங்கள் வீட்டின் அறையிலுள்ள மெத்தை, கட்டிலில் இறந்து கிடந்த வேளையில் தந்தை அதே அறையில் தூக்கிட்டுக் கொண்டார்.
தனது மூன்று பிள்ளைகளையும் தலையணையால் அமுக்கி மூச்சுத் திணற வைத்து கொன்றப் பின்னர், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம்.
இந்த கொலை, தற்கொலை சம்பவத்திற்கான காரணம் விசாரிக்கப்டும் நிலையில் அப்பிள்ளைகளின் தந்தை கடன் தொல்லக்கு ஆளாகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது என்று சிஐடி தலைவர் துணை ஆணையர் மியோர் ஃபாரிட் அலாத்ராஷ் தெரிவித்தார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக இப்பிள்ளைகளின் தாயாரான திருமதி வி.காமினி (வயது 39) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
Tuesday, 21 November 2017
படிக்க வேண்டியது மாணவர்கள் மட்டுமல்ல பெற்றோரும்தான்.....
சுங்கை சிப்புட்-
கல்வி சிறந்து விளங்க புத்தகங்களை படிக்க வேண்டியது மாணவர்கள் மட்டுமல்ல; பெற்றோரும் தான். ஏனெனில் மாணவர்களை ஊக்குவித்து அவர்களை உற்சாகப்படுத்துகின்ற நன்னெறி பண்பு பெற்றோரிடம் இருந்தால்தான் மாணவர்கள் 'சாதனையாளராக' உருவெடுப்பர் என மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபி வலியுறுத்தினார்.
தங்களது பிள்ளைகள் சாதனையாளராக உருவெடுக்க வேண்டும் என்பதையே அனைத்து பெற்றோரும் விரும்புகின்றனர். ஆனால் அதனை சாத்தியப்படுத்த பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன.
மாணவர்களை படி.. படி.. என அனைத்து பெற்றோரும் வலியுறுத்துகின்றனர். இங்கு படிக்க வேண்டியது மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் தான். மாணவர்கள் தங்களது பாட புத்தகங்களை பயின்று அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளும் அதே வேளையில் பெற்றோடும் நடைமுறை வாழ்வியல் கூறுகளை விவரிக்கும் தகவல் சுடர் புத்தகங்களை பயில வேண்டும்.
ஒரு குடும்பத்தை சிறப்பாக வழிநடத்துவது, பிள்ளைகளுக்கு போதிக்கப்பட வேண்டியது என்ன, அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், பிள்ளைகளின் எத்தகைய தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற தகவல்களை உணர்ந்து அதனை செயல்படுத்தினாலே நமது பிள்ளைகள் சாதனையாளர்களாக உருவெடுப்பர்.
கல்வி என்று வரும்போது படி... படி... என பிள்ளைகளை வலியுறுத்தும் பெற்றோரும் தங்களது பிள்ளைகளுடன் இணைந்து பயில் ஆரம்பித்தால் அந்த குடும்பமே ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக மாறும் என சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையின் 'சாதனையாளர் விருது 2017' நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி எஸ்.சாந்தகுமாரி, பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகர் டத்தோ எஸ்.தங்கேஸ்வரி, பள்ளி அறங்காவலர் அமுசு.பெ.விவேகானந்தன், சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், செயலாளர் கி.மணிமாறன், பள்ளி முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், பள்ளி பெ.ஆ.சங்க பொருளாளர் நாகேந்திரன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
டத்தோ கெவின் மொராய்ஸ் கொலை வழக்கு: 6 பேர் தற்காப்பு வாதம் புரியும்படி உத்தரவு
கோலாலம்பூர்-
துணை அரசு தரப்பு வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேரும் தற்காப்பு வாதம் புரியும்படி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தற்காப்பு வாதம் 18,19, 21, 26 ஜனவரி 2018-லும் 22,23 பிப்ரவரி 2018-லும் நடைபெறும் என நீதிபதி டத்தோ அஸ்மான் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் செக்ஷன் 302இன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவதற்கு முன்னர் தங்களது தற்காப்பு வாதத்தை முன்வைக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி காலை 7.00 மணியிலிருந்து 8 மணிக்குள் கடத்தப்பட்ட டத்தோ கெவின் மொராய்ஸ் அதே மாதம் 16ஆம் தேதி சிமெண்ட் கலவை நிரப்பட்ட தோம்புக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் குணசேகரன் ராகவநாயுடு (54), ஆர்.தினேஸ்வரன் (25), ஏகே தினேஸ்குமார் (24), எம்.விஸ்வநாதன் (27), எஸ்.நிமலன் (24), எஸ்.ரவிசந்திரன் (46) ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)