Monday, 6 June 2022

தியாகத்தின் ஒளிச்சுடர் திருவாட்டி பொப்பி

 

(குறிப்பு: இது ஒரு விளம்பரச் செய்தி)

வறுமையின் கடுமையான சூழல், ஆனாலும் தளராத முயற்சி... அர்ப்பணிப்பு... 'ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே' என்பார்கள். ஆம்... அத்தகைய ஒரு தாயின் தியாகம் இன்று அந்த வம்சத்தின் உயர்வுக்கு அடித்தளமிட்டது என்பது வெறும் கற்பனையோ வார்த்தை ஜாலமோ அல்ல. நம்மிடையே வாழ்ந்து மறைந்த திருவாட்டி பொப்பி த/பெ பம்பையன் (Poppie Pampaiyan) வாழ்க்கைச் சுவடு.

கோலாலம்பூர், ஸ்தாப்பாக் பகுதியில் 24/2/1933 அன்று திரு.பம்பையன் - திருமதி ராமாயி தம்பதியருக்கு பிறந்தார் திருவாட்டி பொப்பி. தனது பள்ளிக்கூடம் கற்க வேண்டிய  சிறார் பருவத்தின்போது நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது  கல்வியை தியாகம் செய்த நிலையில் இளம் பருவத்தில் சுங்கை ரெங்கம் தோட்டத்தைச் சேர்ந்த திரு.சி.கே.வை.பழனியாண்டி- திருமதி வள்ளியம்மை தம்பதியரின்  மகன்  சி.கே.பி.ஆண்டியப்பன் (C.K.P. Andiappan) அவர்களை 9/3/1952இல்  கிள்ளான், நகர தண்டாயுதபாணி ஆலயத்தில் கரம்பிடித்தார் திருவாட்டி பொப்பி.

திரு. திருமதி ஆண்டியப்பன்  - பொப்பி இணையருக்கு திருமதி லெட்சுமி (அமரர்), திரு. சுந்தர்ராஜு, திரு. ராஜேந்திரன் (அமரர்), திரு. பழனியாண்டி, திரு. ராதா@தேவன், திருமதி வள்ளியம்மை,குமாரி ராமாயி கிருஷ்ணவேணி என 7 பிள்ளைகள் பிறந்தனர்.

திருவாட்டி பொப்பி இல்லத்தரசியாக இருந்து பிள்ளைகளை கவனித்து வந்த நிலையில் திரு.ஆண்டியப்பன் வாடகை கார் ஓட்டுநராகவும் பகுதி நேரமாக பெட்ரோல் நிலைய ஊழியராகவும் பணி புரிந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டார்.

அச்சமயம் Connaught Bridge Power Station (C.B.P.S.) லோட் நிலத்தில்  வசித்து வந்த இத்தம்பதியினர் வறுமையான சூழலில் வாழ்ந்து வந்த போதிலும் தமது பிள்ளைகளை மிகச் சிறப்பாக வளர்த்து வந்தனர்.

1970ஆம் காலகட்டங்களில் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தில் Pekan Bukit Kemuning, Batu 8 பகுதியில் 4.25 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலப்பரப்பை விலைக்கு வாங்கி அதில் ரப்பர் மரங்களை நடவு செய்தனர்.



இனிதே சென்று கொண்டிருந்த இத்தம்பதியினரின் இல்லற வாழ்வில்  1978ஆம் ஆண்டில்பேரிடி விழுந்தது. ஆம்.... திரு. ஆண்டியப்பன் 21/1/1978இல் இதய நோயின் காரணமாக காலமானார். 

கணவனை இழந்து தனித்து வாழும் தாயாக இருந்தாலும் தம் குடும்பத்தை மேம்படுத்துவதில் ஒருபோதும் சோர்வடையாமல் உழைத்துக் கொண்டிருந்தார். இத்தகைய நடவடிக்கையின் பெரு முயற்சியாக 1990ஆம் காலகட்டங்களில் ரப்பர் மரங்கள் நடவு செய்த நிலத்தில் குடியிருப்புகளை நிறுவலாம் எனும் ஆலோசனையை தனது பிள்ளைகளிடம் முன்வைத்ததன் விளைவாக அந்நிலம் குடியிருப்பு நிலமாக மாற்றம் செய்யப்பட்டது.



தாயின் ஆலோசனை ஏற்ற பிள்ளைகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் காரணமாக 2009ஆம் ஆண்டில் குடியிருப்பு நிறுவப்பட்டது. அதுதான் இப்போது அமைந்திருக்கும் Taman Seri Kemuning வீடமைப்புப் பகுதியாகும்.

வறுமையின் சூழலிலும் இல்லறத்தை நல்லறமாக்கி பிள்ளைகளை சிறந்தவர்களாக உருவாக்கிய திருவாட்டி பொப்பி, 2015இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சுபாங் ஜெயா மெடிக்கல் சென்டரில் சிகிச்சையை மேற்கொண்டு வந்தார்.



பல காலமாக தொடர் சிகிச்சையை மேற்கொண்டு வந்த திருவாட்டி பொப்பி அம்மாவுக்கு ஏற்பட்ட கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி தமது 89ஆவது வயதில் கடந்த 23/5/2022இல்  காலமானார்.

திருவாட்டி பொப்பி அவர்களுக்கு 2 மருமகள்களும் 2 மருமகன்களும் உள்ள நிலையில் 11 பேரப்பிள்ளைகளும் (5 பேரன்கள்,6 பேத்திகள்) 10 கொள்ளுப்பேரப்பிள்ளைகளும் ( 3 கொள்ளுப்பேரன்கள், 7 கொள்ளுப் பேத்திகள்) உள்ளனர்.

மருத்துவர், சட்ட வல்லுநர், அரசாங்க-தனியார் துறை, வணிகம் என பேரப்பிள்ளைகள் மேன்மை வாய்ந்த துறையில் பணியாற்றி வருகின்றனர்.

தமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக்கி தமது வம்சத்தையும் சிறந்த நிலையில் உருவாக்கிய திருவாட்டி பொப்பி அவர்களின் ஆன்மா சாந்தி கொள்ளட்டும். அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.


Wednesday, 25 May 2022

மூன்று காரணங்களாலே கோழி உற்பத்தி பாதிக்கிறது


 

கோலாலம்பூர்-

நாட்டில் கோழி உற்பத்தியானது பயனீட்டாளரின் தேவைக்கு அதிகமாகவே உள்ளது, ஆனால் அது மூன்று முக்கிய காரணங்கள் அதன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்று  விவசாயம் உணவு உற்பத்தி துணை அமைச்சர் அஹ்மட் ஹம்சா கூறினார்.

விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85/

மாணவி வினோஷினி மரணத்தில் ஆருடங்கள் பரப்ப வேண்டாம்


 

கோலாலம்பூர்-

கிள்ளானைச் சேர்ந்த மாணவி வினோஷினியின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய அதிகார்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் இது குறித்து எந்தவோர் ஆருடங்களையும் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பேராசிரியர் Haim Hilman Abdullah எரிபொருள் ஆணையத்தின் ஆறு அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்தில் நேற்று விசாரணையை தொடங்கியதாக குறிப்பிட்டார்.

விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%be/

பட்டாசு கையில் வெடித்தது

 


கோலசிலாங்கூர்-

குரங்கை விரட்ட பந்து பட்டாசை பயன்படுத்தியபோது அது திடீரென வெடித்ததில் வீட்டு துப்புரவு பணியாளர் ஒருவர் தனது இரு விரல்களில் காயம் அடைந்தார்.

விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa/

துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலி- அமெரிக்காவில் துயரம்

 


உவெல்டே-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில் 18 மாணவர்கள் உட்பட ஆசிரியர் கொடூரமாக, புரியாத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். 

விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/

Tuesday, 24 May 2022

என் மகளுக்கு நடந்தது போல் பிற மாணவர்களுக்கு நடக்கக்கூடாது- வினோஷினி தந்தை

 


கிள்ளான்-

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இணையம் வழி கல்வி கற்று வந்த மகளை கடந்த மே 14ஆம் தேதிதான் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தோம்.

கடந்த சனிக்கிழமையன்று பிற்பகல் 3.00 மணியளவில் தன்னை தொடர்பு கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், தனது மகள் விழுந்து விட்டதாகவும் சுயநினைவின்றி கிடப்பதாகவும் முதலில் கூறப்பட்டது என்று வட மலேசியா பல்கலைக்கழக மாணவி வினோஷினியின் தந்தை ஆர்.சிவகுமார் தெரிவித்தார்.

விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/

தோழியின் முன் என்னை 'வெளிப்படுத்தினேனா'?_ எலான் மஸ்க்

 


நியூயார்க்-

தனது தோழியின் முன்பு நான் என்னை 'வெளிப்படுத்தினேன்' என்று கூறும் இந்த பொய்யருக்கு ஒரு சவால். எனது உடலில் உள்ள பொது மக்களுக்குத் தெரியாத ஒரூ அடையாளத்தை மட்டும் (வடுக்கள், பச்சை குத்தல்கள், ...) அவர் தெரிவிக்க வேண்டும். அவரால் அவ்வாறு செய்ய முடியாது. ஏனெனில் அது நடக்கவேயில்லை" என்று டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க்  தெரிவித்துள்ளார்.

விரிவான செய்திகளுக்கு

https://ichannel.com.my/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%81/

சிங்கத்துடன் விளையாட்டு; விபரீதத்தில் முடிந்தது

 


சிங்கத்துக்கு வழக்கமாக உணவளிக்கும் காப்பாளர், அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிங்கம் அவரின் விரலை கடித்து துண்டித்தது.

விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be/

மீண்டும் படப்பிடிப்பில் 'பொன்னியின் செல்வன்'- இணையத்தில் கசிந்த தகவல்

 


சென்னை-

'பொன்னியின் செல்வன்' படத்துக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான் சில காட்சிகள் திருப்தியாக இல்லை என்று கூறியதாகவும் இதையடுத்து அந்த காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை நடத்த மணிரத்னம் திட்டமிட்டு இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. 

விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81/

என்ன ஆச்சு.... மருத்துவமனையில் டி.ராஜேந்தர்

 


சென்னை-

நடிகர் சிம்புவின் தந்தையும், பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4/

Monday, 23 May 2022

பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் கட்டண உயர்வு- அமைச்சு விவாதிக்கும்


 

கோலாலம்பூர்-

பயனீட்டாளர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் அளவுக்கு கட்டண உயர்வு அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்கள் மற்றும் குறைகள் தொடர்பில் மின்னியல் போக்குவரத்து சேவை நிறுவனங்களுடன் போக்குவரத்து அமைச்சு ஆய்வு செய்து விவாதித்து வருகிறது.

விரிவான செய்திகளுக்கு;

https://ichannel.com.my/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a/


Friday, 20 May 2022

வைரலாகும் சோனியாவின் கடிதம்

 எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ கொலையாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்கு கருணை மனு அனுப்பும் போது அவர்களை மன்னித்து தூக்கு தண்டனையை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என சோனியா காந்தி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நளினிக்கு கருணை காட்ட வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தி இருக்கிறார். இந்த கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.

விரிவான செய்திகளுக்கு;

 https://ichannel.com.my/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%95/


Thursday, 15 July 2021

'புளூபிரிண்ட்' திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு வணிகப் பொருட்கள் வழங்கப்பட்டன- KKI பாலசந்திரன்

ரா.தங்கமணி

உலு சிலாங்கூர்-

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிலாங்கூர் மாநில அரசின் 'புளுபிரிண்ட்' (Blueprint) உதவித் திட்டத்தின் கீழ் இந்தியக் குடும்பங்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உலு சிலாங்கூர் கோலகுபுபாரு இந்திய கிராமத் தலைவர் (KKI) பாலசந்திரன் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்டு வரும் புளுபிரிண்ட் உதவித் திட்டத்தில் பல தரப்பட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அவ்வகையில் சிறு, நடுத்தர வணிகங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இங்கு சிறு வணிகங்களை மேற்கொண்டு வரும் இந்தியர்களை அடையாளம் கண்டு அதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட இலாகாவிடம்  சமர்ப்பிக்கப்பட்டன.

முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்ட இவர்களுக்கு உதவிப் பொருட்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் அணமையில் நான்கு இந்தியர்களுக்கு அப்பொருட்கள் வழங்கப்பட்டன என்று பாலசந்திரன் குறிப்பிட்டார். 

இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்கி வரும் வாய்ப்புகளை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் சொன்னார்.


Wednesday, 14 July 2021

சிம்பாங் லீமா மின்சுடலையின் தகன இயந்திரம் பழுதுபார்க்க நடவடிக்கை- கணபதிராவ்


 ஷா ஆலம்-

கிள்ளான் சிம்பாங் லீமா மின்சுடலையில் பழுதடைந்திருக்கும் தகன இயந்திரத்தை சரி செய்வதற்கு மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  இருப்பதாக சிலாங்கூர் மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிள்ளான், ஷா ஆலம் மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுவதோடு அதனால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அண்மைய காலமாக அதிரித்து காணப்படுகிறது.

சிம்பாங் லீமா மின்சுடலையில் ஒரு தகன இயந்திரம் பழுதடைந்து கிடப்பதால் சடலங்களை தகனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதோடு அது மரணமடைந்தோரின் குடும்பத்தினரையும் அசெளகரியத்திற்கு ஆளாக்குகிறது.

இவ்விவகாரம் இன்றைய ஆட்சிக்குழு கூட்டத்தில் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதோடு இதற்கு உரிய தீர்வை மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

இதனிடையே, மாநில அரசாங்க செயலாளருடன் தொடர்பு கொண்ட மந்திரி பெசார் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் கீழ் இயங்கும் சிம்பாங் லீமா மின்சுடலை தகன இயந்திரத்தை பழுதுபார்க்கும் நடவடிக்கை எடுக்கப்படி கேட்டுக் கொண்டதாகவும் கணபதிராவ் குறிப்பிட்டார்.

டான்ஶ்ரீ முஹிடினை ஆதரிக்கும் அம்னோ எம்.பி.க்கள்

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோ வாபஸ் பெற்று ஒரு வாரம் நெருங்கும் நிலையில்  டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் கவிழாமல் இருப்பதற்கு அமைச்சரவை உட்பட அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவாக இருப்பதுதான் காரணமாக உள்ளது.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில் இன்னும் பலர் அவர்களின் ஆதரவாளராக உள்ளனர்.

அதோடு கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அம்னோ ஆதரவாளர்கள் இருப்பதால் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இன்னமும் வலுவாக உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

Tuesday, 13 July 2021

பாஸ் ஆதரவு மன்ற பேரவையின் மகளிர் பிரிவுத் தலைவி குமுதா மரணம்

புத்ராஜெயா- 

பாஸ் ஆதரவு மன்ற பேரவையின் மகளிர் பிரிவுத் தலைவி குமாரி குமுதா இராமன்  திடீர் மரணமடைந்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இஸ்லாமிய கட்சி என வர்ணிக்கப்படும் பாஸ் கட்சியில் ஆதரவாளர் மன்றத்தின் பிரபல நபராக விளங்கிய குமுதா, தற்போது மகளிர், குடும்ப, சமூக நல துறை துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

புத்ராஜெயா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்தார்.

12, 13ஆம் பொதுத் தேர்தல்களில் திராம் சட்டமன்றத் தொகுதியிலும் 14ஆவது பொதுத் தேர்தலில்ஜொகூர் ஜெயா சட்டமன்றத் தொகுதியிலும் பாஸ் கட்சியின் வேட்பாளராக குமாரி குமுதா களம் கண்டார். 

குமுதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கு பாஸ் கட்சி அனுதாபம் தெரிவித்துள்ளது.

வறுமையில் வாடுவோருக்கான உதவித் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் - கோபி வலியுறுத்து

 

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

கோவிட்-19 பெருந்தொற்றால் வருமானம் இழந்து தவிக்கும் தரப்பினருக்கான உதவித் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்று சிலாங்கூர், அலாம் மெகா இந்திய சமூகத் தலைவர் மு.கோபி வலியுறுத்தினார்.

கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்து வருமானப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்தகைய தரப்பினருக்கு நாடு முழுவதும் தற்போது உதவிப் பொருட்களை பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர். அதே போன்று கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீ.கணபதிராவின் ஏற்பாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேலை வாய்ப்பை இழந்துள்ள மக்களும் வருமான ரீதியில் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி கொள்ளும் வரை உதவிப் பொருட்கள் வழங்கப்படுவது தொடரப்பட வேண்டும்.

எம்சிஓ 3.0 முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்  என்பது கேள்விக்குறியே. அதனை கருத்தில் கொண்டு மக்களுக்கான உதவித் திட்டங்கள் தொடரப்படுவதை மத்திய, மாநில அரசுகளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது அமைப்புகளும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோபி குறிப்பிட்டார்.

Monday, 12 July 2021

5,600க்கும் அதிகமான உதவிப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன- கணபதிராவ்


ரா.தங்கமணி 

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலினால் அமலாக்கம் செய்யபட்டுள்ள எம்சிஓ 3.0 நடவடிக்கையினால் வருமானப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி. 

ஜூன் 1ஆம் தேதி முதல் இந்நாள் வரை இதுவரை 5, 600க்கும் அதிகமான உதவி பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் குறிப்பிட்டார். 


இன்றைய காலகட்டம் மக்களுக்கு சோதனையான காலகட்டம். பெரும்பாலானோர் வேலை,  வருமானம் இழந்து வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 

இத்தகைய சூழலில் மக்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவிப் பொட்டலங்கள் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மட்டுமல்லாது கிராமத் தலைவர்கள், மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய கிராமத் தலைவர்கள் என பலவேறு தரப்பினரும் இந்த உதவிகளை  வழங்கி வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதிராவ் சொன்னார். 

Sunday, 11 July 2021

வெள்ளைக் கொடியின் அர்த்தம் மக்களுக்கு தெரியாதா? சந்தேகம் எழுப்பும் குலாவின் காணொளி


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நாட்டை அண்மைய காலமாக உலுக்கி வரும் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று மக்களின் வாழ்வாதார சூழலை பாதித்துள்ளதோடு நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் சீர்குலைத்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்பட்டுத்த கடந்த ஜூன் மாதம் முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 (எம்சிஓ 3.0) அமல்படுத்தப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் வெள்ளை கொடி, கறுப்பு கொடி பிரச்சாரம் சூடுபிடித்திருந்தது.

எம்சிஓ 3.0 அமலாக்கத்தினால் வேலை இழந்து வருமானம் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு உதவிகள் வேண்டும் எனும் நோக்கில் தங்களது வீடுகளில் வெள்ளைக் கொடியை பறக்கவிட்டனர்.

வெள்ளைக் கொடி பிரச்சாரம் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் பல குடும்பங்களுக்கு உதவிக்கரங்கள் நீண்டன. 'மக்களுக்காக மக்கள்' எனும் முழக்கத்துடன் இந்த வெள்ளைக் கொடி பிரச்சாரம் பல குடும்பங்களுக்கு கை கொடுத்துள்ளது.

அதே போன்று அரசியலை உள்ளடக்கி  கறுப்புக் கொடி பிரச்சாரம் சமூக ஊடகங்களில்  முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் பதவி விலக வேண்டும், நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவசரகால சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கறுப்புக் கொடி பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் வெள்ளைக் கொடி, கறுப்புக் கொடி பிரச்சாரம் என்னவென்று தெரியாமல் மக்கள் குழம்பி போயுள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் டிக் டாக் காணொளியை வெளியிட்டுள்ள ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரனின் செயல்தான் மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் வருமானம் இழந்து தவிப்போரின் இன்னலை தீர்க்க தொடங்கப்பட்ட வெள்ளைக் கொடி பிரச்சாரத்தின் பயனாக மக்களுக்கான உதவித் திட்டங்களை பல சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது இயக்கங்கள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினர் ஆக்கப்பூர்வ நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் வெள்ளைக் கொடியின் அர்த்தம் என்னவென்று மக்களுக்கு தெரியவில்லை என கூறுவது நியாயமாகுமா? வெள்ளைக் கொடிக்கான அர்த்தம் என்னவென்று கூட தெரியாத  அளவுக்கு மக்கள் மடையர்களாகவா இருக்கிறார்கள்? என்ற சந்தேகத்தை  குலாவின் காணொளி எழுப்புகிறது.

குலாவின் காணொளி 

22 மாத கால ஆட்சியில் என்ன செய்தோம், எதை செய்யாமல் விட்டோம் என்ற குழப்பத்தில் நீங்கள் (குலசேகரன்) வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து செயல்படக்கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு இருந்த மக்கள்தானே.  நாம் என்ன சொன்னாலும் வாய் மூடி கேட்டுக் கொண்டிருப்பார்கள்? என்ற எண்ணத்தில் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற தோரணையில் காணொளி வெளியிட வேண்டாம் YB குலா.

அதேபோன்று மக்கள் இப்போதுதான் தெளிவாக உள்ளனர். யாரை நம்ப வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும். யாரை புறந்தள்ள வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து செயல்படக்கூடிய அளவுக்கு மக்கள் தெளிவாக உள்ளனர். 

அரசியல்வாதிகளிடமே தெளிவாக சிந்தித்து செயல்படக்கூடிய நிலையில் இருக்கும் மக்களுக்கா வெள்ளைக் கொடியின் அர்த்தம் தெரியாது... விளக்குவீர்களா குலா.....?