Saturday 5 January 2019
பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலேயே இதிஎஸ் சேவை குறைக்கப்பட்டது - கேசவன் விளக்கம்
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் செயல்பட்ட மின்சார ரயில் சேவை (இதிஎஸ்) அட்டவணை வெகுவாக குறைக்கப்பட்டதற்கு பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே காரணம் என்று மலேசிய ரயில்வே நிலைய அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் விவரித்தார்.
சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் இதிஎஸ் பயண அட்டவணை குறைக்கப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தோசித்தேன்.
இங்கிருந்து ரயில் சேவையை பெறும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலேயே பயண அட்டவணை குறைக்கப்பட்டது என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
அதேபோன்று கடந்த மக்களவை கூட்டத் தொடரிலும் இது தொடர்பில் குரல் எழுப்பியுள்ளேன். பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஒரு நாளைக்கு 4 முறை இயக்கப்பட்ட ரயில் சேவை இரு முறையாக மாற்றப்பட்டது என மக்களவையில் பதிலளிக்கப்பட்டது.
மேலும், இவ்வட்டாரத்தில் செயல்பட்டு வந்த டெலிகோம் மலேசியா (திஎம்) சேவை அலுவலகம் மூடப்பட்டது தொடர்பில் புகார்களை பெற்றுள்ளேன்.
இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரைவில் கலந்துரையாடவிருப்பதாகவும் இந்த சேவை அலுவகம் திறக்கப்பட்டது தொடர்பிலான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும் கேசவன் கூறினார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண களப்பணி இறங்குவதில் தாம் ஒருபோதும் தயக்கம் காட்டுவதில்லை என கூறிய அவர், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமது அலுவலகத்தை நாடலாம் என்று மேலும் சொன்னார்.
டெலிகோம் மலேசியா, இதிஎஸ் சேவை தொடர்பில் சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் விடுத்திருந்த செய்திக்கு பதிலளிக்கையில் கேசவன் இவ்வாறு கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment