Sunday 7 May 2017

மைக்கிக்கு எதிரான வழக்கில் பேராக் இந்தியர் வர்த்தக சபை வெற்றி

மைக்கிக்கு எதிரான வழக்கில் 

பேராக் இந்தியர் வர்த்தக சபை  வெற்றி!


ஈப்போ-
6 மாதங்களுகு இடை நீக்கம் செய்தது செல்லாது என மலேசிய இந்தியர் வர்த்தக தொழில்துறை சம்மேளனத்துக்கு (மைக்கி) எதிராக பேராக் இந்தியர் வர்த்தக சபை தொடர்ந்த வழக்கில் வெற்றி கண்டுள்ளது.

மைக்கியின் தவறான நடவடிக்கைகளை விமர்சனம் செய்ததாக கூறி பேராக் இந்திய வர்த்தக சபையை 6 மாதத்திற்கு மைக்கி இடைநீக்கம் செய்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அண்மையில் இங்குள்ள ஈப்போ உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பேராக் இந்திய வர்த்தக சபையை இடைநீக்கம் செய்ய மைக்கிக்கு அதிகாரம் இல்லை என்றும் வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் வெள்ளி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி சே முகமட் ருஸிமா தீர்ப்பு வழங்கியதாக அச்சபையின் தலைவர் மு.கேசவன் தெரிவித்தார்.

 பேராக் இந்தியர் வர்த்தக சபையை பிரதிநிதித்து வழக்கறிஞர்கள் ம.மதியழகன், பாபுராஜ் ஆகியோர் வாதிட்டனர்.

No comments:

Post a Comment