யூத்தார் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மருத்துவக் கல்வி
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
காஜாங்-
பல்வேறு
துறைகளில் இளம் பட்டதாரி மாணவர்களை உருவாக்கி வரும் துங்கு அப்துல் ரஹ்மான்
பல்கலைக்கழகம் (யூத்தார்) தற்போது ஆயுர்வேத மருத்துவக் கல்வியையும் பயிற்றுவிக்க
தயாராகிக் கொண்டிருக்கிறது.
அவ்வகையில்
ஆயுர்வேதம், யோகா, இயற்கை
மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி அமைச்சின் கீழ் இயங்கும் ஆயுர்வேத அறிவியல், ஆய்வியல் மத்திய சபையுடன் யூத்தார் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
நேற்று
இங்கு காஜாங், சுங்கை லோங் பகுதியில் உள்ள யூத்தார்
பல்கலைக்கழக தலைமையகத்தில்இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது.
மலேசியாவுக்கான
இந்திய துணைத் தூதர் நிக்கிலேஷ் சந்திர கிரி, இந்திய
தூதரகத்தின் முதன்மை செயலாளர் பிரம்ம குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நவீன
மருத்துவ முறைக்கு பதிலாக இயற்கை மருத்துவ முறையை உயிர்ப்பிக்கச் செய்யும் வகையில்
இப்பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டமாக ஆயுர்வேத மருத்துவக் கல்வி முறையை
அறிமுகப்படுத்தவிருக்கிறோம் என இப்பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சுவா
குறிப்பிட்டார்.
சித்த
மருத்துவத் துறையை உள்ளடக்கிய மருத்துவமனையை கட்டுவதற்கு யூத்தார் பல்கலைக்கழகம்
எண்ணம் கொண்டுள்ளது. கம்பார் யூத்தார் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மருத்துவமனையை
நிர்மாணிப்பதற்கு இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகள் ஆகலாம் என அவர் மேலும் சொன்னார்.
No comments:
Post a Comment