Wednesday 17 May 2017

இந்தியர்களின் பிரச்சினையை தீர்ப்பது தேசிய முன்னணிதான்

இந்தியர்களின் பிரச்சினையை தீர்ப்பது தேசிய முன்னணிதான்!


சுங்கை சிப்புட்-
தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொள்ளும் எத்தகைய நடவடிக்கையையும் குறை சொல்லும் எதிர்க்கட்சியினரை பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் கடுமையாக சாடினார்.

எதிர்க்கட்சியினர் என்பதற்காக தேசிய முன்னணியின்  நடவடிக்கைகளை குறை சொல்லி கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு குறை சொல்லி கொண்டிருப்பதால் இந்தியர்கள் அடைய வேண்டிய நன்மைகளை முழுமையாக பெறாமலே இருக்கின்றனர்.



ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் பல்வேறு நல் திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. மக்களை பற்றி சிந்தித்து கொண்டிருப்பது நாங்கள்.

ஆனால் எதிர்க்கட்சியினர் மக்களிடம் நெருக்கமாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி கொள்கின்றனர். மக்கள் அவர்களை நல்லவர்கள் என நம்பும் அளவுக்கு தங்களது நடை, பாவனைகளை மாற்றி கொள்கின்றனர்.
இதுபோன்ற பொய்யான தோற்றத்தை தேசிய முன்னணியால் ஏற்படுத்த முடியாது. மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து அவற்றை நிறைவேற்ற முனைவதே எங்களின் தலையாய கடமையாகும் என இங்கு நடைபெற்ற மக்கள் மேம்பாட்டு சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசியர்களுடன் டத்தோஸ்ரீ ஸம்ரி கேக் வெட்டி மகிழ்ந்தார்.



இந்த நிகழ்வில் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ அ.சக்திவேல், பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டத்தோ வ.இளங்கோ, லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ சூல்கிப்ளி, ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ், தொகுதி மஇகா தலைவர் மு.இளங்கோ, துணைத் தலைவர் அஜாட் கமாலுடின், உதவித் தலைவர் சண்முக வேலு, செயலாளர் கி.மணிமாறன் உட்பட மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment