தேசியத்
தலைவர் இல்லையேல் யோகேந்திர பாலன்?
வெற்றி
வேட்பாளரை களமிறக்குங்கள்!
சுங்கை
சிப்புட்-
சுங்கை
சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம்
வேட்பாளராக களமிறங்க வேண்டும். இல்லையேல் மண்ணின் மைந்தன் தொழிலதிபர்
யோகேந்திர பாலன் களமிறக்கப்பட வேண்டும் என சுங்கை சிப்புட் இந்தியர் இயக்கத்தின் தலைவர்
வீ.சின்னராஜு வலியுறுத்தினார்.
மஇகா தேசியத்
தலைவரின் தொகுதி என சிறப்பு அடையாளத்தைக் கொண்டுள்ள இத்தொகுதியில் வரும் 14ஆவது பொதுத்
தேர்தலில் வேட்பாளராக களமிறங்குபவர் யார்? என்பது பெரும் கேள்வியாக
எழுந்துள்ளது.
இந்நிலையில்
மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் களமிறங்க வேண்டும். கட்சியின் தேசியத்
தலைவரே இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இங்குள்ள இந்தியர்களின் வாழ்வாதாரத்தை
மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.
இல்லையேல், எங்களது வாழ்வாதாரத்தை
மாற்றியமைக்கக்கூடிய ஆற்றல் மிக்கவரான தொழிலதிபரான யோகேந்திர பாலன் தேசிய முன்னணியின்
வேட்பாளராக இத்தொகுதியில் களமிறக்கப்பட வேண்டும்.
இம்மண்ணின்
மைந்தரான யோகேந்திர பாலன் இங்குள்ள தமிழ்ப்பள்ளிகள், பொது இயக்கங்கள் ஆகியவற்றுக்கு
உதவிக்கரம் நீட்டி வருவதோடு பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவோரின் பிரச்சினைகளுக்கும்
தீர்வு கண்டு வருகிறார்.
சின்னராஜு |
வரும் பொதுத்
தேர்தலில் வெற்றி வேட்பாளரே நமக்கு முக்கியம் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்
அறிவித்துள்ளார்.
அவ்வகையில் யோகேந்திர பாலனை இத்தொகுதியின் வேட்பாளராக அறிவித்தால் அவரின் வெற்றியை உறுதி செய்ய பல்வேறு பொது
இயக்கங்கள் ஒன்றிணைந்து களப்பணியாறுவோம் என தொகுதி முன்னாள் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவருமான
சின்னராஜு தெரிவித்தார்.
No comments:
Post a Comment