Monday 8 May 2017

அமைச்சரவை கூட்டத்தில் எஸ்எம்சியின் 3 பரிந்துரைகள்


கோலாலம்பூர்,
ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் (எஸ்எம்சி) பரிந்துரைத்துள்ள 3 கோரிக்கைகள்  அடுத்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் 35ஆம் ஆண்டு விழாவை தொடக்கி வைத்து உரையாற்றிய டத்தோஸ்ரீ ஸாயிட், டான்ச்ஸ்ரீ எம்.தம்பிராஜா என்னிடம் பரிந்துரைத்துள்ள 3 கோரிக்கைகள் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பிற இனங்களுக்கு வழங்குவது போல் கல்வி, வர்த்தக வாய்ப்புகளில் சமநிலை வழங்கப்பட வேண்டும், எஸ்பிஎம் தேர்வில் 4, 5ஏ பெறும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்பட வேண்டும், பொது பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எஸ்எம்சி தோற்றுநர் டான்ச்ஸ்ரீ தம்பிராஜா முன்வைத்த 3 பரிந்துரைகள் ஆகும்.

No comments:

Post a Comment