ரா.தங்கமணி
ஷா ஆலம்-
இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது அதில் பிறர் பிரச்சினைகளை திணிப்பதை அனைத்துத் தரப்பினரும் கைவிட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் வலியுறுத்தினார்.
இந்தியர்களுக்கான குடியுரிமை, கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.
இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண முற்படும்போது பிற இனத்தினர், அந்நிய நாட்டவர்கள் ஆகியோரின் பிரச்சினைகளை கொண்டு வந்து இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முட்டுக்கட்டை ஏற்படுத்தக்கூடாது.
இதனால் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு காணப்படாமல் இன்னமும் நீண்டு கொண்டிருக்கிறது.
இத்தகைய நடவடிக்கை இன்னும் நீடிக்கப்படாமல் இருக்க இந்தியர்களின் பிரச்சினைகளில் பிறரது பிரச்சினையை திணிக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
Saturday, 18 August 2018
மகிழம்பு தமிழ்ப்பள்ளியில் இலட்சியப் பயணம், சாதனை முத்துகள் நிகழ்வுகள்
ஈப்போ-
தேசிய வகை மகிழம்பூ தமிழ்ப்பள்ளி, இப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் இலட்சியப் பயணம், சாதனை முத்துகள் ஆகிய இரு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
வரும் 18/8/2018 சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணி வரை பள்ளியின் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் ஏற்பாட்டில் நடத்தப்படும் இலட்சியப் பயணம் (யூ.பி.எஸ்.ஆர். தேர்வெழுதும் மாணவர்களுக்கான தன்முனைப்பு பட்டறை) தொடர்ந்து மூன்றாவது முறையாக நடத்தப்படுகிறது.
பள்ளியின் ஏற்பாட்டில் நடத்தப்படும் சாதனை முத்துக்கள் (மாணவர்களை உற்சாகமூட்டும் அங்கீகாரங்கள்) தொடர்ந்து பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டு நடவடிக்கைகளும் இணைந்து ஒரே நாளில் நடப்பது இதுவே முதல் முறை. இவ்விரண்டும் பள்ளியின் வருடாந்திர அங்கமாக இனி வரும் வருடங்களிலும் தொடரும் என பள்ளியின் முன்னாள் மாணவர் கழக செயலவையினர் கேட்டுக் கொண்டனர்.
மேல் விவரங்களுக்கு: 016-5303538 (கலைசேகர் - கழக ஆலோசகர்)
Friday, 17 August 2018
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
டெல்லி-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடால் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக இன்று மாலை மரணம் அடைந்தார்.
வயது மூப்பின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென உடல்நலப் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் காலமனார் என மருத்துவனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா வாஜ்பாயின் மறைவைத் தொடர்ந்து பிரதமர்
நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

பேராவை குறி வைப்பாரா டத்தோஸ்ரீ அன்வார்?
கோலாலம்பூர்-
தனது அரசியல் வாழ்வின் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்காக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பேரா மாநிலத்தை குறி வைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதமராக பதவி வகித்து வரும் துன் டாக்டர் மகாதீருக்கு பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமாக பதவியேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் பிரதமாக பதவியேற்பதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள டத்தோஸ்ரீ அன்வார் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த இரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனவாருக்கு தங்களது தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மத்திய அரசாங்கம் மட்டுமல்லாது பேரா மாநிலமும் பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ளதால் இங்கு டத்தோஸ்ரீ அனவார் வெற்றி பெறுவது மிக சுலபமானதாகும்.
விட்டுக் கொடுக்கப்படும் தொகுதியை ஏற்றுக் கொண்டு அனவார் பேராவில் போட்டியிடுவாரா? அல்லது அவரது கவனம் வேறொரு மாநிலத்திற்கு திசை திரும்புமா? என்பது கேள்விக்குறியே.
கேரளாவின் வெள்ளப் பேரிடரில் 67 பேர் பலி
கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பெரு வெள்ளத்தின் காரணமாக இதுவரை 67 பேர் உயிரிழந்தள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக கேரளா மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த மழை, வெள்ளத்திற்கு இதுவரை 67 பேர் பலியாகியுள்ள நிலையில் 50,000 பேர் கட்டாய சூழலில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரிடர் காரணமாக கொச்சின் விமான நிலையத்தின் முதன்மை வாயில் வரும் சனிக்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
மேலும், கேரளா மாநிலத்தைச் சூழ்ந்துள்ள வெள்ளப் பேரிடர் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

100ஆவது நாளை தொட்டது பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் (ஆகஸ்ட் 16) 100 நாட்கள் நிறைவடைகிறது.
கடந்த மே 9ஆம் தேதி நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இனம், மதம், மொழி ஆகியவற்றை கடந்து 'மலேசியர்' என்ற ஓருணர்வுடன் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கட்டிலில் அமர வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை பிரதமர் வேட்பாளராகக் கொண்டு தேர்தலை சந்தித்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று ஆட்சியை கைப்பற்றியதோடு பல மாநிலங்களின் ஆட்சியையும் கைப்பற்றியது.
'100 நாட்களில் 10 வாக்குறுதிகள்' என்ன முழக்கத்தோடும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை உள்ளடக்கியும் தேர்தலை எதிர்கொண்ட பக்காத்தான் ஹராப்பானுக்கு மலேசியர்கள் வற்றாத ஆதரவை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்ய மாட்டேன்- டத்தோஸ்ரீ நஜிப்
கோலாலம்பூர்-
விரைவில் நடைபெறவுள்ள இரு இணைத் தேர்தல்களில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் களமிறங்க மாட்டார்.
பலாக்கோங் , ஸ்ரீ செத்தியா ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த இடைத் தேர்தல்களின் போது பிரச்ணார நடவடிக்கைகளில் களமிறங்குவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டபோது 'இல்லை, ஓய்வு எடுக்கப் போகிறேன்' நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

பக்காத்தான் அரசாங்கத்தின் மீது 2/3 பெரும்பான்மை மலேசியர்கள் மனநிறைவு
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் மீது 2/3 பெரும்பான்மை கமலேசியர்கள் மனநிறைவு கொண்டுள்ளதாக ஆய்வு முடிவு கூறுகிறது.
மெர்டேக்கா ஆய்வு மையம் மேற்கொண்ன ஆய்வில் இம்முடிவு கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 67 விழுக்காட்டினர் மனநிறைவு கொண்டுள்ளனர். இம்முடிவு முந்தைய முடிவை காட்டிலும் சரிவு கண்டுள்ளது. நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இம்முடிவு 87%ஆக இருந்தது.
அதோடு, பிரதமாக துன் மகாதீரின் தலைமைத்துவத்தை 71 விழுக்காட்டினர் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் இம்முடிவு 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 83 விழுக்காடாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

Wednesday, 15 August 2018
எங்கே அந்த 3 லட்சம் பேர்? - டத்தோ சிவராஜ் கேள்வி
கோலாலம்பூர்-
நம்பிக்கைக் கூட்டணி அரசு 3,407 இந்தியர்களுக்கு சிவப்பு நிற அடையாள அட்டைக்கு பதிலாக நிரந்தரக் குடியுரிமை வழங்குவது குறித்து தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சிவராஜ் சந்திரன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்நிலையில் 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள், அவர்களை அடையாளம் காண்பார்களா? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் துன் டாக்டர் மகாதீர், குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்த 60 வயதை கடந்த 3,407 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க நம்பிக்கைக் கூட்டணி அரசு முன்வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இந்த இடத்தில் ஒரு உண்மையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். குடியுரிமையை பெறும் 3,407 பேரையும் மை டஃப்தார் மூலம் தேசிய முன்னணி அரசுதான் அவர்களின் ஆவணங்களை திரட்டியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
14ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறான சர்ச்சைகளை கிளப்பினார்கள். முன்னதாக ஒற்றுமை மற்றும் சமூக நல்வாழ்வுத் துறை அமைச்சர் செனட்டர் வேதமூர்த்தி, வெளியிட்ட அறிக்கையில் 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என கூறியிருந்தார்.
ஆனால் பொதுத் தேர்தலுக்குப் பிறகு மனிதவள அமைச்சர் குலசேகரன் 30 ஆயிரம் இந்தியர்களுக்குத்தான் குடியுரிமை இல்லை என்கிறார்.
இத்தருணத்தில் குடியுரிமை இல்லாத இந்தியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிரந்தரக் குடியுரிமையை வழங்க நம்பிக்கை கூட்டணி அரசு ஆக்ககரமான செயல் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக குடியுரிமை இல்லாமல் இருக்கும் மீதமுள்ள 296,593 இந்தியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.
இந்த வாக்குறுதியை நம்பிக்கை கூட்டணி அரசு ஆட்சி அமைத்தால் 100 நாட்களுக்குள் நிறைவேற்றுவோம் என கூறியிருந்தது என டத்தோ சிவராஜ் சந்திரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நிரந்தர குடியுரிமை- பிரதமர் மகாதீர்
கோலாலம்பூர்-
சிவப்பு அடையாள அட்டை கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விரைவில் குடியுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் கூறினார்.
ஏற்கெனவே குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற அவர் அதற்காக கால அவகாசத்தை தெரிவிக்கவில்லை.
பக்காத்தானில் உள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், செனட்டர்கள் ஆகியோருடன் நடத்தப்பட்ட சந்திப்புக் கூட்டத்தில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், 60 வயதுக்கு கீழ்பட்ட மலேசியரில் ஒருவரை தாய், தந்தையராக கொண்டுள்ளவர்களின் குடியுரிமை விண்ணப்பங்களுக்கான சட்டத் திட்டத்தில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரு சொன்னார்.
இந்த அறிவிப்பின் மூலம் சிவப்பு அடையாள அட்டையை கொண்டுள்ள 3,407 இந்நியர்கள் மலேசிய குடியுரிமையை பெறவுள்ளனர்.
ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என 100 நாள் திட்ட வாக்குறுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தெரிவித்திருந்தது.
சுங்கை சிப்புட்டில் அன்வார் போட்டியா?- விட்டுக் கொடுக்கிறாரா கேசவன்?
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஏதுவாக சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தமது தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் என்ற ஆருடம் கூறப்படுகிறது.
டத்தோஸ்ரீ அன்வாரின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் கேசவன் அவருக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுக்கலாம் என்றும் அதற்கு பதிலாக செனட்டர் பதவி கேசவனுக்கு வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.
பிரதமர் துன் மகாதீருக்கு பிறகு பிரதமராக பதவியேற்கவிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முதலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களான துன் வீ.தி. சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சர்களாவும் பதவி வகித்துள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கேசவன் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர், துணை அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாதது சுங்கை சிப்புட் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது.
இதனிடையே, பிகேஆர் கட்சியின் தேர்தலில் ரபிஸி ரம்லி அணியில் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் கேசவனின் கருத்துகளை அறிய தொடர்பு கொள்ள முயன்றும் கருத்துகளை அறிய முடியவில்லை.

'மக்கள் தீபாவளி'யாக இவ்வாண்டு தீபாவளி கொண்டாடப்படும்- ஆதி.சிவசுப்பிரமணியம்
ஈப்போ-
பேரா மாநில அரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தீபாவளி கொண்டாட்டம் இம்முறை 'மக்கள் தீபாவளி'யாக கொண்டாடப்படும் என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் கொண்டாடப்படும் தீபாவளி சந்தை குறித்து அரசு இலாகாக்கள், லிட்டில் இந்தியா வணிகர்கள், அரசு சார்பற்ற பொது இயக்கங்கள் ஆகியவற்றுடன் கலந்துரையாடல் நடத்தப்படும்.
வரும் 17ஆம் தேதி பிற்பகல் 3.00 மணிக்கு மாநில அரசு செயலகத்தில் உள்ள சந்திப்பு அறையில் (UPEN) இச்சந்திப்பு நடைபெறவுள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
நியாயமான விலை
இந்த தீபாவளிச் சந்தையில் அமைக்கப்படவுள்ள கடைகள் நியாயமான விலையில் வணிகர்களுக்கு வழங்கப்படும்.
தங்களுக்கான கடைகளை வேண்டுவோர் ஈப்போ மாநகர் மன்றத்திடம் அதற்கான தொகையை செலுத்தி கடைகளை பெற்றுக் கொள்ளலாம்.
முடிந்த தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு இந்தியர்கள் பெருமளவு ஆதரவு வழங்கினர். அவர்களின் ஆதரவுக்கு நன்றி கூறும் வகையில் இந்த தீபாவளி மக்கள் தீபாவளியாகக் கொண்டாடப்படவுள்ளது.
வெளிநாட்டவர்களுக்கு கடைகள் இல்லை
மேலும், இந்த தீபாவளிச் சந்தையில் உள்ளூர் வியாபாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். அந்நிய நாட்டவர்கள் இங்கு வியாபாரம் மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அதோடு, உள்ளூர் வியாபாரிகள் கடைகளை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு கொடுக்க முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.
மேலும், கடைகளுக்கு முன்னாள் அமைக்கப்படவுள்ள கூடாரங்களில் கடை உரிமையாளர்களுக்கு வர்த்தகம் மேற்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.
ஈப்போ மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்- சிவநேசன்
ரா.தங்கமணி
ஈப்போ-
ஈப்போ மருத்துவமனையில் நிலவும் வாகன நிறுத்துமிடப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்று பேரா மாநில சுகாதாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
இம்மருத்துவமனையில் உள்ள தற்போதைய வாகன நிறுத்துமிடம் பற்றாக்குறை நிலவுகிறது. அதோடு, புதிதாக கட்டப்பட்டு வரும் பெண்கள், குழந்தைகள் சிறப்பு பிரிவு, இருதய சோதனை கட்டடத்தில் கூட 300 வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது. ஆனால் அதுவும் இப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது.
இம்மருத்துவமனைக்கு எதிரில் ஈப்போ மாநகர் மன்றத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை மருத்துவமனை வாகன நிறுத்துமிடமாக கையகப்படுத்தினால் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
அதோடு, நோயாளியை பார்க்க வருபவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் 4,5 வாகனங்களில் வருகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். முடிந்த அளவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே வாகனத்தில் வருகை அளிக்க வேண்டும் என்று சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)