Tuesday, 14 July 2020
நிறவெறியை உதிர்க்க மக்களவை மாண்புமிகுகள் மன்றமா? மூடர்கூடமா?
Monday, 13 July 2020
இந்தியர்கள் கையேந்தி நிற்க வேண்டும் என நினைக்கிறாரா பேரா எம்பி?
Friday, 10 July 2020
சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு
கோவிட்-19 காலகட்டத்திலும் பொதுத் தேர்தலை அறிவித்த சிங்கப்பூரில் இன்று வாக்களிப்பு நடைபெறுகிறது.
காலை 8.00 மணி
முதல் 1,100 வாக்களிப்பு மையங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.
2,653,942 வாக்காளர்கள்
வாக்களிக்கவுள்ள இந்த தேர்தலில் கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் சமூக இடவெளி
உட்பட முன்னேற்பாடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இதுவரை உலகம் முழுவது 12 மில்லயன் பேரை பாதித்துள்ளது.
இதில் சிங்கப்பூரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thursday, 9 July 2020
தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு நில விவகாரத்தில் சுயநலப்போக்கு எதுவும் கிடையாது- திருமதி இந்திராணி
ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட்,
தாமான் துன் சம்பந்தன் குடியிருப்பு நில விவகாரம் தொடர்பில் தனக்கு எவ்வித சுயநலப்
போக்கும் கிடையாது. தன்னுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட மக்கள் பிரச்சினைக்கு தீர்வு
காணும் பொருட்டே அக்குடியிருப்பு விவகாரம் தொடர்பில் குரல் கொடுத்துள்ளேன் என்று பெனெராஜு
இன்சான் இயக்கத்தின் தலைவி திருமதி இந்திராணி தெரிவித்தார்.
40 ஆண்டுகால
வரலாற்றை கொண்டுள்ள தாமான் துன் சமப்ந்தன் குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
வீடமைப்புத் திட்டத்தின்போது அங்கு கோயில்,சூராவ்,
மண்டபம், சந்தைப்பகுதி ஆகியவை நிர்மாணிப்பதற்கு மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டு நில
ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் திட்டமிட்டதைப்போல
இந்த நான்கும் நிர்மாணிக்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் அந்நிலத்தில் புற்கள் காடு
மண்டிக்கிடக்கின்றன.
இதன் தொடர்பில்
அங்குள்ள மக்கள் தம்மிடம் முறையிட்டதன் விளைவாகவே தமது இயக்கத்தின் மூலம் இந்நில விவகாரம் குறித்து குரல்
எழுப்பியுள்ளேண்.
சட்ட ரீதியிலான
வகையிலே தமது நடவடிக்கை அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட திருமதி இந்திராணி, தாமான்
துன் சம்பந்தன் குடியிருப்பாளர்கள் கேட்டுக் கொண்டதாலேயே இவ்விவகாரத்தை தாம் கையிலெடுத்ததாக
அவர் சொன்னார்.
மேலும் இந்நில
விவகாரம் தொடர்பில் மேம்பாட்டு நிறுவனம் வாக்குறுதி அளித்ததைபோல் ஆலயம், சூராவ், மண்டபம்,
சந்தைப்பகுதி ஆகியவை நிர்மாணிப்பதற்காக முழுமையான ஆய்வு மேற்கொண்டு 30 நாட்களுக்குள்
தமக்கு பதில் அளிக்குமாறு மாநில மந்திரி பெசாரிடம் மகஜர் சமர்ப்பித்துள்ளதாக திருமதி
இந்திராணி மேலும் சொன்னார்.
இரவோடு இரவாக ஶ்ரீ மதுரை வீரன் ஆலயம் உடைப்பு; இந்தியர்கள் கொந்தளிப்பு
அலோர் ஸ்டார்-
70 ஆண்டுகால
வரலாற்றைக் கொண்டுள்ள அலோர் ஸ்டார், ஜாலான் ஸ்டேசன் அருகே இருந்த ஶ்ரீ மதுரை வீரன்
ஆலயம் அதிகாலை வேளையில் உடைக்கப்பட்ட சம்பவம் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை
வேளையில் அந்த ஆலயத்தை அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்ற அதிகாரிகள் உடைத்துள்ள சம்பவம்
பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவோடு இரவாக
ஓர் ஆலயத்தை உடைக்க வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது? என்று சமூக ஊடகங்களில் பலர் கேள்வி
எழுப்புகின்றன.
கெடா மாநிலத்தில்
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைந்து இரு மாதங்கள்
மட்டுமே கடந்துள்ள நிலையில் இந்தியர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெடா மாநிலத்தில்
தற்போது பாஸ் கட்சி ஆட்சி புரியும் சூழலில் இந்தியர்களின் பிரதிநிதியாக யாரும் இல்லாததால்
இதுபோன்ற அவலநிலை அரங்கேற்றப்படுகிறதா? எனும்
கேள்வியும் இந்தியர்களிடையே எழுந்துள்ளது.
இதனிடையே, ஶ்ரீ
மதுரை வீரன் ஆலயம் உடைபட்ட சம்பவம் தனக்கு
பேரதிர்ச்சி அளிப்பதாக கெடா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ எஸ்.ஆனந்தன் தெரிவித்தார்.
இந்த ஆலய விவகாரம்
தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கடந்த ஜூன் 30ஆம் தேதி மகஜர் வழங்கினோம்.
இவ்விவகாரம் குறித்து மாநில மந்திரி பெசார் விளக்கம் கோரப்படும் என்று அவர் சொன்னார்.
கேடிஎம் தொழிலாளர்களால்
1942ஆம் ஆண்டு இவ்வாலயம் இங்கு கட்டப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Wednesday, 8 July 2020
தேர்தல் காலத்தில் மட்டும்தான் மக்கள் பிரச்சினைகள் கிளறப்படுமா?
சிறப்பு ஆலோசகர் பதவியை மஇகாவுக்கு வழங்குக- பொது இயக்கங்கள் கோரிக்கை
ரா.தங்கமணி
ஈப்போ-
பேரா
மாநிலத்தில் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக மஇகாவின் பிரதிநிதி நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 50க்கும்
மேற்பட்ட சமூகநல இயக்கங்கள் பேரா மந்திரி பெசாரின்
அலுவலகத்தில் இன்று மகஜரை சமர்ப்பித்தன.
இன்று
மந்திரி பெசாரின் அலுவலகத்தில் திரண்ட குழுவுக்கு தலைமையேற்ற டாக்டர்
வ.ஜெயபாலன், தேசிய முன்னணி ஆட்சியின்போது சிறப்பு ஆலோசகர், சட்டமன்ற சபாநாயகர், சிறப்பு அதிகாரி ஆகிய பதவிகள் மஇகாவினருக்கு வழங்கியது.
அப்பதவிகளின்
மூலம் இந்திய சமுதாத்திற்கு தன்னால் ஆன சேவைகளை மஇகா
மேற்கொண்டது.
தற்போது
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மஇகாவுக்கு சிறப்பு ஆலோசகர் பதவியை
வழங்குவதற்கு இன்றைய மந்திரி பெசார்
தயக்கம் காட்டுவது ஏன்?
மஇகாவுக்கு
வழங்கப்பட்ட பதவிகளின் மூலம் இந்திய சமூக அமைப்புகளுக்கு நிதியுதவி, தமிழ்ப்பள்ளிகள்
சார்ந்த பிரச்சினைகள், ஆலயப் பிரச்சினைகள், ஆலயங்களுக்கான நிதியுதவி, இந்தியர்களுக்கான
வேலை வாய்ப்புகள், சமூகநல உதவிகள் என பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன என்பதை
மந்திரி பெசார் மறந்து விடக்கூடாது என்று ஜெயபாலன் வலியுறுத்தினார்.
அதோடு இந்தியர்கள்
சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்திய பிரதிநிதித்துவம் இருப்பதே சிறந்த தீர்வாக
அமையும். அது மஇகா பிரதிநிதியாக அமைந்திருப்பதே
தேசிய அரசியல் நீரோட்டத்தில் வலுவானதாகவும் அமைந்திடும் என்று கார்த்திக் குறிப்பிட்டார்.
மேலும், இம்மாநிலத்திலேயே
அதிகமான பொது இயக்கங்கள் உள்ள நிலையில் கோலாலம்பூரைச் சேர்ந்த பொது இயக்கத்தின் மூலம்
மானியங்கள் வழங்கப்படுவதாக அறிகிறோம், எதற்காக வெளி மாநிலத்தைச் சேர்ந்த இயக்கத்தை
வைத்து மானியங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்விவகாரத்தில்
மாநில மந்திரி பெசார் சிறந்ததொரு தீர்வை காண்பார்
என்று தாங்கள் நம்புவதாக பொது இயக்கப் பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
பொது இயக்கங்களின்
மகஜரை மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி அசாட் சவ்வான் பெற்றுக் கொண்டார் என்று குறிப்பிடத்தக்கது.
வாதத்திற்கு ஏற்புடையது; நடைமுறைக்கு ஒத்துவராது- மணிமாறன்
Monday, 6 July 2020
அடையாள அட்டை, குடியுரிமை விண்ணப்பத்தின் நடைமுறையை எளிமையாக்குக- கணபதிராவ்
திடீர் தேர்தல்; பிஎச் மாநில அரசுகள் கலைக்கப்படாது
Thursday, 2 July 2020
'டத்தோஶ்ரீ' அந்தஸ்துடைய இந்திய தொழிலதிபர் கடத்தி கொலை; 11 பேர் கைது
பெட்டாலிங் ஜெயா-
டத்தோஶ்ரீ
அந்தஸ்து கொண்ட இந்திய தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 11 பேர்
கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வு பிரிவு தலைவர் ஃபாட்ஸில்
அஹ்மாட் தெரிவித்தார்.
இந்த
கடத்தல், கொலை சம்பவத்திற்கு பின்னணியில் கடன் அல்லது தொழில் ரீதியிலான நோக்கமே அடிப்படையாக
இருக்கும் என்பதை மறுக்க முடியாது.
இச்சம்பவம்
தொடர்பில் ஒரு வங்காளதேசி உட்பட 11 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்
சொன்னார்.
கடந்த
ஜூன் 10ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, பண்டார் ஶ்ரீ டாமான்சாராவில் உள்ள மைதானத்தில் உடற்பயிற்சி
மேற்கொண்டிருந்த டத்தோஶ்ரீ ஆறுமுகம் சில நபர்களாக் கடத்தப்பட்டார்.
பின்னர்
ஜூன் 27ஆம் தேதி அவரின் சடலம் ரவாங்கில் கண்டெடுக்கப்பட்டது.


























